Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது! என்ஐஏ அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் இவர்கள் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக இருவரை என்ஐஏ கைது செய்திருக்கிறது.

Pakistan Kashmir

பஹல்காம் தாக்குதல்: இரண்டு பேர் கைது

இந்தக் கொடூரமான தாக்குதல் குறித்து NIA நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாக NIA தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பஹல்காம், பட்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதுகுறித்து NIA வெளியிட்ட அறிக்கையில், “பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகிய இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்களை சரியாக கூறியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். மூன்று பயங்கரவாதிகளுக்கும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஹில் பார்க்கில் உள்ள ஒரு குடிசையில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

மேலும், அவர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் தேவையான உதவிகளையும் செய்துள்ளனர். பயங்கரவாதிகள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து கொடூரமாக கொன்றுள்ளனர்” என்று NIA தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 19-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்பிரிவு ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தால் தண்டனை வழங்குவது தொடர்பானது. இந்த வழக்கு குறித்து NIA தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்

பஹல்காமில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் 25 சுற்றுலாப் பயணிகளையும், காஷ்மீரைச் சேர்ந்த குதிரை வண்டி ஓட்டுநர் ஒருவரையும் கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த தகவலின்படி, கொலையாளிகள் சுடுவதற்கு முன்பு அவர்களின் மதத்தைப் பற்றிக் கேட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகளை குறிவைத்துத் தாக்கியது.

இந்தியா பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்ததாக தெளிவுபடுத்தியது. ஆனால், பாகிஸ்தான் இந்தியாவின் மேற்கு எல்லையில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி பதிலடி கொடுத்தது. இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு பெரும்பாலான ஏவுகணைகளை செயலிழக்கச் செய்தது. இருப்பினும், எல்லை மற்றும் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்த கடுமையான ஷெல் தாக்குதலில் உயிர் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்தியா பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அவர்களின் விமான தளங்களும் அடங்கும். இதன் காரணமாக பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்வந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+