பாகிஸ்தான் செய்த கேவலமான வேலை.. பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி.. விங் கமாண்டர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இந்திய வான் எல்லைப்பகுதியில் பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் வேண்டுமென்றே தங்கள் வான் எல்லையில் பயணிகள் விமானங்களை அனுமதித்துள்ளது. பயணிகள் விமானங்களை கேடயங்களாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது." என விங் கமாண்டர் வியோமிகா சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் அடுத்தடுத்து கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள 9 நிலைகளை குறிவைத்து தாக்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டது. அதற்கு இந்திய ராணுவம் சரமாரி பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் ஏவிய டிரோன்கள் நடுவழியிலேயே அழிக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று இரவு பதற்றமான நிலை நீடித்து வருகிறது.

Pakistan Using Civilian Airliners as Shields Wing Commander Vyomika Singh

இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏர் பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி, சர்வதேச எல்லைப் பகுதியில் தாக்குதல் தொடுத்தது மட்டுமின்றி, அத்துமீறி பயங்கரவாதிகளை ஊடுருவவும் உதவி உள்ளது. உரி, பூஞ்ச், அக்னூர், உதம்பூர் உள்பட 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியுறவுத்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்தியாவின் 36 நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. இந்தியா மீது ஏவிய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியிடம் பாகிஸ்தான் வாங்கியவை என கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார்.

இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் போயிங் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் தனது வான் எல்லையை மூடவில்லை. இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. உர், பூஜ் , உதம்பூர் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயன்றது. இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், "மே 7 ஆம் தேதி மாலை 8:30 மணிக்கு ஒரு ஆளில்லா ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய போதிலும், பாகிஸ்தான் அதன் சிவில் வான்வெளியை மூடவில்லை. இந்தியா மீதான அதன் தாக்குதல் விரைவான வான் பாதுகாப்பு பதிலடியைத் தரும் என்பதை முழுமையாக அறிந்த பாகிஸ்தான் சிவில் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஐபி அருகே பறந்து கொண்டிருந்த சர்வதேச விமானங்கள் உட்பட சந்தேகத்திற்கு இடமில்லாத சிவில் விமானங்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. நாங்கள் இப்போது காட்டிய ஸ்கிரீன்ஷாட், பஞ்சாப் துறையில் அதிக வான் பாதுகாப்பு எச்சரிக்கை சூழ்நிலையில் பயன்பாட்டு விமான ரேடார் 24 இன் தரவைக் காட்டுகிறது.

நீங்கள் பார்த்தது போல், எங்கள் அறிவிக்கப்பட்ட மூடல் காரணமாக இந்திய பகுதியில் உள்ள வான்வெளி சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து முற்றிலும் விலகி உள்ளது. இருப்பினும், கராச்சி மற்றும் லாகூர் இடையே விமானப் பாதையில் பறக்கும் சிவில் விமான நிறுவனங்கள் உள்ளன. இந்திய விமானப்படை பதிலடியின்போதும் நிதானத்தைக் காட்டியது, இதனால் சர்வதேச பயணிகள் விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்தது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+