பாகிஸ்தானில் பின்லேடன் இருந்த இடத்தில் "பயங்கரவாத" தொழிற்சாலை.. அதுவும் ராணுவ முகாம் அருகே! பகீர்
டெல்லி: இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக மத்திய அரசு லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய மூன்று பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்து இருந்தது. இதற்கிடையே இந்த பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அந்நாட்டு ராணுவ வளாகத்தில் கூட்டுப் பயிற்சி முகாமை அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளைக் கண்டறிந்து மத்திய தடை விதித்து வருகிறது.

ஏற்கனவே நமது நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய மூன்று பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள ராணுவ வளாகத்தில் பயிற்சி முகாமை அமைத்துள்ளதாக இப்போது ஷாக் தகவல் வெளியாகியுள்ளது.
பாக். ராணுவ முகாம்: பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமுக்கு மிக அருகிலேயே பாகிஸ்தான் ராணுவ முகாம் இருக்கிறது. அதாவது அந்நாட்டு ராணுவத்தின் அனுமதியின்றி வெளியாட்கள் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் கூறப்படுகிறதது. இதனால் பயிற்சி முகாம் முற்றிலும் பாதுகாப்பாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவின் ஜெனரல் ஒருவர் தான் முகாமை மேற்பார்வையிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஆயுதங்களைக் கையாளுதல் உட்பட பல போர் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த போர் பயிற்சியில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
ஒசாமா பின்லேடன்: இதே அபோதாபாத் நகரில் தான் அல்-கொய்தா முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் பாதுகாப்பான வீட்டில் வந்தார். அவரை கடந்த மே 2011இல் அமெரிக்காவின் சிறப்புப் படை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. அந்த வீட்டைப் பாகிஸ்தான் அரசு 2012ம் ஆண்டு இடித்தது. இப்போத அதே நகரில் மீண்டும் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் ஒசாமா பின் லேடன் வீடு இருந்த பகுதியில் இந்த பயிற்சி முகாம் நடக்கிறதா.. இல்லை வேறு பகுதியில் நடக்கிறதா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
தொழிற்சாலை போல: லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் இணைந்து இந்த பயிற்சி முகாமை நடத்துகிறார்கள். கிட்டதட்ட பெரிய அளவிலான "பயங்கரவாத தொழிற்சாலை" போல இதை அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இப்போது உளவுத் தகவல்கள் வந்துள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மூன்று பயங்கரவாதிகளுமே என்ஐஏவின் most-wanted பட்டியலில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முகாம் மூன்று பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆட்சேர்ப்பு முகமாக இருக்கவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது.
எல்லையில் தாக்குதல்கள்: கடந்த சில நாட்களாகவே பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனம் உட்பட ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் அமைத்துள்ள இந்த பயிற்சி முகாம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த பயங்கரவாத பயிற்சி முகாமால் எல்லையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications