'தீ பிடிக்காத பசையுடன் தீக்குளிப்பு'.. நாடாளுமன்ற தாக்குதல் சதிகாரர்களின் பிளான் C சதித் திட்டம்!
டெல்லி: தீ பிடிக்காத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தை அரங்கேற்றவும் நாடாளுமன்ற தாக்குதல் சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சதிகாரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 3 வகையான சதித் திட்டங்களை அவர் செயல்படுத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மைசூர் மனோரஞ்சன் இருவரும் கடந்த புதன்கிழமையன்று லோக்சபாவுக்குள் குதித்து புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த இருவரையும் எம்.பி.க்கள் சுற்றி வளைத்து தாக்கி மடக்கிப் பிடித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நீலம் தேவி, அமோல் ஷிண்டே இருவரும் புகை குப்பிகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களை லலித் ஜா என்ற சதிகாரர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே 3 வகையான சதித் திட்டங்களுடன் அதாவது பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என தாக்குதல் சதிகாரர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர்; நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்துவது; துண்டு பிரசுரங்களை வீசுவது; இவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது பிளான் ஏ, பிளான் பி ஆகியவை. 3-வது சதித் திட்டம்தான் தீக்குளிப்பு நாடகம் நடத்துவது. அதாவது தீ பிடித்துவிடாத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு நாடகம் நடத்துவதற்கும் இந்த சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டி இருந்தனர் என்கின்றனர் டெல்லி போலீசார்.
இந்த தாக்குதல் சதிகாரர்களுக்கும் இவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு அனுமதி சீட்டு பெற்றுக் கொடுத்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கான தொடர்பு குறித்தும் டெல்லி போலீசார் விசாரிக்க உள்ளனர். பிரதமா சிம்ஹாவை அழைத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications