நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீச்சு.. முக்கிய குற்றவாளியான லலித் ஜாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லலித் ஜாவுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் திடீரென்று லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகை குண்டுகளை வீசினர்.

அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் பெண் உள்பட 2 பேர் இதேபோல் கலர் புகை குண்டுகளை வைத்து பீதியை ஏற்படுத்தினர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் சாகர் சர்மா மற்றும் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35), ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரிடமும் டெல்லி தனிப்படை போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் விசாரித்தனர்.
இதையடுத்து 4 பேரும் நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 7 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவத்துக்கு சூத்திரதாரியாக கருதப்படும் லலித் ஜா நேற்று டெல்லி போலீசில் சரணடைந்தார். பீகாரை சேர்ந்த இவர் கொல்கத்தாவில் ஆசிரியராக இருக்கிறார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
அதாவது லலித் ஜா தான் நாடாளுமன்றத்தில் நுழைந்து இந்த சம்பவத்தை நிகழ்த்துவதற்கான தேதியை குறித்துள்ளார். குறிப்பாக 2001ல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதேதேதியை இவர் குறித்து கொடுத்துள்ளார். இந்த திட்டமிடல் அனைத்தும் குர்கிராமில் வைத்து நடந்துள்ளது. அங்கு விக்ரம் ஷர்மா என்பவரின் வீட்டில் வைத்து திட்டமிட்டுள்ளனர்.
மேலும் லோக்சபா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் கோஷமிட்டு ஸ்பிரே, கலர் புகை குண்டு வைத்த 4 பேரின் செல்போன்களை முன்கூட்டியே இவர் தான் வாங்கி வைத்துள்ளார். மேலும் அவர்கள் போலீசில் சிக்கியவுடன் அங்கிருந்து அவர் ஓடி தலைமறைவான நிலையில் போலீசில் சரணடைந்துள்ளார். இதனால் தான் லலித் ஜா இந்த சம்பவத்தின் சூத்திரதாரி என அழைக்கப்படுகிறார்.
இவரிடம் விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம். இதையடுத்து இன்று லலித் ஜாவை டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி போலீஸ் காவலில் எடுக்க மனு செய்தனர். இதையடுத்து லலித் ஜாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications