நம்பிக்கையில்லா தீர்மானம்! லோக்சபாவில் அடுத்து என்ன நடக்கும்? தப்புமா மோடி அரசு? நிலைமை இதுதான்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இன்று கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்? நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? தற்போதைய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மத்திய அரசு தப்பிக்குமா?, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மேலும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் ஆளும் தரப்பு மணிப்பூர் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் என கூறி வருகிறது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இந்நிலையில் தான் 5வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கி உள்ளன.
இதற்கிடையே தான் இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றார். அதேபோல் தெலுங்கானா பிஆர்எஸ் கட்சியின் எம்பியும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வழங்கிய நோட்டீசும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை சபாநாயகர் அறிவித்தபிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பபட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா? நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை காட்ட பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறையாகும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஆளும் தரப்பு நாடாளுமன்றத்தில் தனது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். இந்த வேளையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படாமல் இருந்தால் ஆட்சி கவிழும். இதனால் தான் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் பேசும்பொருளாகி உள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமே கொண்டு வர முடியும். அதுவும் லோக்சபாவில் மட்டுமே கொண்டு வர முடியும். ராஜ்யசபாவில் கொண்டு வர முடியாகும். இந்தியாவில் யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியும். இவ்வாறு கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஆளும் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் ஆட்சி கவிழும்.
தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக இருக்க 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பாஜகவுக்கு 303 எம்பிக்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் என்டிஏ எனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 331 எம்பிக்கள் உள்ளன. மாறாக 26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 144 எம்பிக்கள் மட்டுமே உள்ளன.
இதுதவிர பாஜக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இல்லாத தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசாவின் நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களுக்கு 70 எம்பிக்கள் உள்ளன. அதன்படி பார்த்தால் மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போதைய நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நிச்சயம் தோல்வியடையும்.
இருப்பினும் கூட எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைய வாய்ப்பிருந்தாலும் அதன் மீதான விவாதத்தில் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விவாதிக்க வைக்கலாம் என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலையாய நோக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications