அட அதிசயம்.. தேசியவாத காங்கிரசை அவையிலேயே புகழ்ந்து தள்ளிய மோடி.. என்ன நடக்குது இங்க?!
இன்று ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரசை புகழ்ந்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லி: இன்று ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரசை புகழ்ந்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் நாளே அமர்க்களமாக பல்வேறு விஷயங்கள் இரண்டு அவையிலும் நடந்தது. இன்று ராஜ்ய சபாவின் 250 அமர்வு நடைபெறுகிறது. ஆகவே இந்த அமர்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இதனால் இன்று நடக்கும் அமர்வில் பிரதமர் மோடி பேசினார். ராஜ்ய சபாவின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து அவர் பேசினார்.

பேச்சு
இன்று ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரசை புகழ்ந்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது பேச்சில், இன்று நான் இரண்டு கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளை நான் இங்கு பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் எப்போதும் விதிப்படி சிறப்பாக நடந்து இருக்கிறார்கள்.

விதிகள் முக்கியம்
பாராளுமன்ற விதிகளை பின்பற்றி அவர்கள் சிறப்பாக நடந்து உள்ளனர். பாராளுமன்ற ஒழுக்கத்தை, மரபை அவர்கள் மீறியது கிடையாது. எப்போதும் அவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது கிடையாது.

இரண்டு கட்சி
ஆனாலும் கூட இரண்டு கட்சியினரும் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளனர். தங்கள் நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்து இருக்கிறார்கள். அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக கட்சியும் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஏன் பாராட்டு
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் தற்போது அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் சக்தியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் அக்கட்சியை தற்போது பிரதமர் மோடி பாராட்டி பேசி இருக்கிறார். திடீர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி பாராட்ட காரணம் என்ன, அக்கட்சியுடன் பாஜக கூட்டணிக்கு முயல்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications