கட்டுப்பாடுகளை அதிகரிப்பு.. இந்தியா வர கொரோனா "நெகட்டிவ்" கட்டாயம்.. மன்சுக் மாண்டவியா உத்தரவு!
டெல்லி: சீனா, ஹாங் காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியா வருவதற்கு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா வரும் பயணிகள், பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை சான்றிதழை ஏர் சுவிதா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒமிக்ரானில் இருந்து மாறுபாடு அடைந்த புதிய வகை கொரோனாவான பிஎப்7 கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை பிஎப் 7 கொரோனா ஒருவரிடமிருந்து 16 பேருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா சீனாவில் வேகமாக பரவி வருவதால், உலக நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவை தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎப்7 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது.

3 நாட்களில் 39 பேருக்கு கொரோனா
இதையடுத்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. இது மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மூவருக்கு கொரோனா
அதேபோல் தமிழ்நாட்டில் சீனாவில் இருந்து மதுரை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

ஆர்டிபிசிஆர் சோதனை
தொடர்ந்து சீனா, சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சுழற்சி முறையில் 2 சதவிகிதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
இந்த நிலையில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை மற்றும் ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கைகளை 'ஏர் சுவிதா' தளத்தில் பதிவேற்றவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பரிசோதனை பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications