"நாங்க பிரான்ஸ் நாட்டிற்கே போகல.." மும்பையில் ஒரே போடாக போட்ட பயணி.. உண்மையில் என்ன தான் நடக்கிறது
டெல்லி: பிரான்சில் நாட்டிலிருந்து மும்பைக்குத் திரும்பிய பயணிகளிடம் ஊடகங்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அப்போது அவர்கள் அளித்த பதில் தான் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
பிரான்சில் ஆள் கடத்தல் புகாரைத் தொடர்ந்து இந்திய விமானம் நான்கு நாட்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பயணிகளிடம் அங்கிருந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை நிறைவடைந்த நிலையில், அந்த விமானம் இன்று காலை மும்பை திரும்பியது. அப்போது செய்தியாளர்களை அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க முயன்றனர்.
ரியாக்ஷன் என்ன: இருப்பினும், செய்தியாளர்களுக்குப் பதில் சொல்லாமல் அவர்கள் ஓட்டமும் நடையுமாக மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர். அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியது,. விமானத்தில் 276 பயணிகள் இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், எத்தனை பேர் இந்தியர்கள், எத்தனை பேர் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று துல்லியமான தகவல்கள் இல்லை.
பிரான்ஸ் நாட்டில் இருந்து அந்த விமானம் மும்பைக்கு வந்த நிலையில், அதில் இருந்த பயணிகளிடம் குடிவரவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின்னரே அவர்களை வெளியேற குடிவரவு அதிகாரிகள் அனுமதித்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்களை ஊடகங்கள் சூழ்ந்தன. இருப்பினும், அவர்களிடம் பதில் சொல்லாமல் பயணிகள் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
என்ன சொன்னார்கள்: இருந்தாலும் ஒரு பயணியை ஊடகங்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பியன. அப்போது அவர், "இங்கே யாருமே பிரான்ஸ் நாட்டில் இருந்து வரவில்லையே" என்று பொய் கூறி சமாளித்தவாரே அங்கிருந்து ஓடினார். மற்றொரு பயணி தான் பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பியதை ஒப்புக் கொண்டாலும் அவர் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இந்த விமானத்தில் சென்றவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நாட்டில் குடியேறச் சென்றவர்கள் என்று கடந்த சில நாட்களாகவே தகவல் உலா வந்து கொண்டி இருக்கிறது. இந்தியா திரும்பிய பயணிகள் ஊடகங்களைச் சந்திக்காமல் கிளம்ப இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.
என்ன நடந்தது: துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா செல்லும் விமானத்தில் ஆள் கடத்தல் நடந்ததாகத் தகவல் கிடைத்த நிலையில், பிரான்ஸ் அதிகாரிகள் விமானத்தைச் சோதனை செய்தனர். எரிபொருள் நிரப்ப வாட்ரி ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கிய நிலையில், அதிகாரிகள் விமானத்தைத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விமானத்தை இயக்கிய லெஜண்ட் ஏர்லைன்ஸ் தங்கள் மீது எந்தவொரு தவறும் இல்லை என்று கூறிவிட்டது. இதையடுத்து நேற்று திங்கள்கிழமை விமானம் கிளம்ப பிரான்ஸ் நாட்டு நீதிபதி அனுமதி அளித்தார். இருப்பினும் 276 பேர் மட்டுமே மும்பை திரும்பியுள்ளனர். 5 சிறார்கள் உட்பட 25 பேர் பிரான்ஸ் நாட்டில் அகதிகளாக இருக்கப் புகலிடம் கோரியுள்ளனர். சர்வதேச சட்டத்தின் கீழ் இதுபோல புகலிடம் கோருபவர்களைச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப முடியாது.
மேலும், இரண்டு பேரை ஆள் கடத்தல் புகார்களை அதிகாரிகள் தடுப்பு காவலில் வைத்தனர். அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்ட போதிலும், இன்று மும்பை திரும்பிய விமானத்தில் அவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications