உள்நோக்கம் புரியுது.. 45 நாள் எங்க போனீங்க.. ராகுல் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதிலடி
டெல்லி: லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தொடர்ந்து அவர் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் முடிந்த 45 நாள் காலஅவகாசத்தில் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்போது குற்றச்சாட்டுவதன் உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பெயரை கூறாமல் ஞானேஷ் குமார் கூறியதாவது:
ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் அதகிாரி ரிசல்ட்டை அறிவித்த பிறகு அதில் சந்தேகம் இருப்பின் 45 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம். தேர்தலை எதிர்த்து தேர்தல் மனு தாக்கல் செய்யலாம். இதற்கான விதி சட்டத்தில் உள்ளது. ஆனால் இந்த 45 நாள் காலஅவகாசம் முடிந்த பிறகு இப்போது கேரளா, கர்நாடகா தேர்தலை சுட்டிக்காட்டி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிறகு 45 நாள் காலஅவகாரத்தில் எந்த வேட்பாளரும், எந்த அரசியல் கட்சிகளும் முறைகேடுகளை காணவில்லை. இன்று, இவ்வளவு நாட்களுக்கு பிறகு முறைகேடு என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை வாக்காளர்களும், நாட்டு மக்களும் புரிந்து கொள்கிறார்கள்'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications