"சமூக சேவை என்ற பெயரில்.." ஸ்லீப்பர் செல்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்! அதிர வைக்கும் தகவல்
டெல்லி: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நடத்திய ரெய்டு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில காலமாகவே நாட்டின் எல்லைப் பகுதியில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
குறிப்பாகப் பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவத் தயாராக உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு, பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.

அசம்பாவித சம்பவங்கள்
இந்த ஊடுருவல் முயற்சிகளை எல்லையில் இருக்கும் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இதற்கிடையே நமது நாட்டிற்குள் அசம்பாவித சம்பவங்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு தான், பீகார் மாநிலத்தில் பிரதமரைக் கொலை செய்யச் சதி செய்திருந்த இருவரை அம்மாநில போலீசார் கைது செய்திருந்தனர்.

அதிரடி ரெய்டு
அதேபோல கடந்த வாரம் அசாமில் இருந்து வந்த பயங்கரவாதிகளைப் பெங்களூர் போலீசார் கைது செய்து இருந்தனர். இப்படி பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகத் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஸ்லீப்பர் செல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India) அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் பயங்கரவாத ஸ்லீப்பர் செல்களுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை இந்தியா டுடே செய்தி நிறுவனம் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டு உள்ளது. இந்த ரெய்டில் அமைப்பின் விரிவாக்கம் குறித்த ப்ளூ பிரிண்டை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Recommended Video

சமூக சேவை என்ற பெயரில்
மேலும், அரசு அமைப்புகளிடம் இருந்து தப்பித்து தங்கள் கொள்கைகளைப் பரப்ப பல்வேறு துணை அமைப்புகளையும் தொடங்கியதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். சமூக வேவைகள் என்ற பெயரில் நிதியைத் திரட்டி சமூக விரோத செயல்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு அந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆட்சேர்ப்பு
பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெய்டில் கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications