ஜஸ்ட் 2 வாரம்தான்.. 44 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
இந்தியாவில் 44 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது
டெல்லி: இந்தியாவில் 44 கோடி குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தயார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. 2 வாரங்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் தொற்று நீங்கவில்லை.. இன்றைய தினம் மேலும் 8,309 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில், 8,309 கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளன.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,80,832 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 236 பேர் நம்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,68,790 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,08,183 ஆக உயர்ந்தாலும், தொற்றுக்கு இப்போதைக்கு 1,03,859 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சை
இந்தியாவில் இதுவரை 122,41,68,929 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதேசமயம் இந்த எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்து வந்தது... இப்படிப்பட்ட சூழலில்தான், ஓமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உள்ளது.. இது ரொம்ப ஆபத்தான வைரஸ் என்கிறார்கள்..

உலக நாடுகள்
பன்மடங்கு வேகத்துடன் பரக்கூடியதும்.. இந்த ஆபத்தான கொரோனா வேரியண்ட் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் உலக நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது.. இந்தியாவுக்கு இதனால அடுத்த கவலையும் சேர்ந்துள்ளது.. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், இந்த புது வைரஸ் தொற்று ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனமும் ஏற்கனவே தெரிவித்துள்ளது..

தடுப்பூசி
அதுமட்டுமல்ல, தடுப்பூசி செலுத்ததாத குழந்தைகளை இந்த ஓமிக்ரான் வைரஸ் எந்த அளவுக்கு பாதிக்கும் எனற் கலகக்மும் உள்ளது. எனினும், ஓமிக்ரான் வகை தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு மும்முரமாக எடுத்து வருகிறது... அதில் ஒரு நடவடிக்கையாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவர் டாக்டர் என்கே அரோரா விரிவாக தெரிவித்துள்ளார்.

வேக்சின்கள்
அவர் சொல்லும்போது, "இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள 44 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விரிவான திட்டத்தை தயாரித்திருக்கிறோம்... இப்போதைக்கு 4 வகையான வேக்சின்கள் குழந்தைகளுக்கு செலுத்த போதுமான அளவில் நம்மிடம் உள்ளது.. எனவே, ஆரோக்கியமற்ற குழந்தைகள், இணை நோய்கள் கொண்ட குழந்தைகளுக்கு முதலில் முன்னுரிமை தரப்படும்.. இவர்களுக்கு செலுத்திவிட்டு, அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் விரிவான திட்டம் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும்" என்றார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications