Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாக்கை கண்ட்ரோல் பண்ணிட்டு இருங்க.. பாஜக எம்பிக்களிடம் சீறிய அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி: ‛‛உங்களின் நாக்கை கண்ட்ரோல் செய்யுங்கள்.. பிரியங்கா என்னை கண்ட்ரோல் செய்யாத'' என பாஜக எம்பிக்களால் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகை ஐஸ்வர்யா ராயின் மாமியாருமான ஜெயா பச்சன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நேற்று ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்த விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகை ஐஸ்வர்யா ராயின் மாமியாருமான நடிகை ஜெயா பச்சன் பேசினார்.

please-mind-your-tongue-priyanka-dont-control-me-jay-a-bachchan-sparks-in-rajya-sabha-and-slams-b

இவர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். நேற்றைய விவாதத்தில் ஜெயா பச்சன் பேசும்போது ஆளும் கட்சி எம்பிக்கள் குறுக்கீடு செய்ததால் அவர் கடும் டென்ஷனானா்.

ராஜ்யசபாவில் ஜெயா பச்சன், ‛‛பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
மக்களின் நம்பிக்கைகையை நீங்கள் அழித்துவிட்டீர்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது. உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நீங்கள் (பாஜகவினர்) பணியமர்த்திய எழுத்தாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இந்த ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயரிட்டதற்கு விளக்கம் தந்துள்ளீர்கள். ஆனால் பல பெண்களின் சிந்தூர் அழிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். சிந்தூர் என்பது குங்குமத்தை குறிக்கும். பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களின் குங்குமத்தை அழித்தற்கு பழிவாங்கும் வகையில் இந்த பெயர் வைத்தாக கூறப்பட்ட நிலையில் அதுபற்றி ஜெயா பச்சன் இந்த கருத்தை தெரிவித்தார்.

இதனை கேட்டவுடன் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கோபமான ஜெயா பச்சன், ‛‛ஒன்று நீங்கள் பேசுங்கள் அல்லது நான் பேசுவேன். நீங்கள் பேசும்போது நான் குறுக்கீடு செய்வது இல்லை. ஒரு பெண் பேசும்போது நான் ஒருபோதும் குறுக்கீடு செய்வது இல்லை. எனவே தயவு செய்து நாக்கை கண்ட்ரோல் செய்து கொண்டு இருங்கள்'' என்று பாஜக எம்பிக்களை கையை நீட்டி எச்சரிக்கை செய்தார்.

இந்த வேளையில் ஜெயா பச்சன் அருகே உத்தவ் சிவசேனா எம்பியா பிரியங்கா சதுர்வேதி அமர்ந்திருந்தார். அவர், ஜெயா பச்சனின் கையை தொட்டு சாந்தப்படுத்த முயன்றார். அப்போது டென்ஷனான ஜெயா பச்சன், பிரியங்கா சதுர்வேதியை நோக்கி கையை நீட்டி, ‛‛பிரியங்கா என்னை கண்ட்ரோல் செய்யாதே'' என்றார். இதனை கேட்ட பிரியங்கா சதுர்வேதி தனது முகத்தை மறைத்து கொண்டு சிரித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர் பெயர் குறித்த திருமதி பச்சனின் கருத்துக்கள் இப்போது பாஜகவை கோபப்படுத்தியுள்ளன. "அவர்களின் மனநிலையைப் பாருங்கள். ஜெயா பச்சன் ஜி, பயங்கரவாதிகள் சிந்தூரத்தை அழித்தார்கள், ஆனால் சிந்தூர் வெறும் அலங்காரத்திற்காக அல்ல; அது வலிமை மற்றும் திறனின் சின்னமாகும். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் ஒரு செய்தியை அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டது: நீங்கள் சிந்தூரைத் துடைத்துவிடுங்கள், நாங்கள் உங்களை அழிப்போம். இது அடையப்பட்டது," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறினார், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இதுபோன்ற கருத்துகளால் ஆயுதப்படைகளின் மன உறுதியைக் குறைத்ததாக குற்றம் சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+