'ரொம்ப கண்டிஷன் போடுறார்.. அப்பாவை உடனே அரஸ்ட் பண்ணுங்க.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன 5 வயது பையன்!
டெல்லி: போலீஸ் நிலையத்திற்கு வந்த 5-வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை பிடித்து ஜெயிலில் போடுங்க சார் என்று புகார் அளித்தான். இதனால் ஒரு நிமிடம் திடுக்கிட்ட போலீசார், அப்படி என்னதான் அவனது அப்பா தவறு செய்தார் என்று கேட்டனர். அதற்கு சிறுவன் தனக்கே உரிய குறும்புத்தனத்துடன் அளித்த பதில் காவல் நிலையத்தையே கலகலப்பாக்கிவிட்டது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
முன்பெல்லாம் 10 பிள்ளைகளை பெற்றெடுத்தாலும் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் அதிகம் சிரமப்பட்டதில்லை. ஆனால் தற்போதையை காலத்தில் 2 பிள்ளைகளை வளர்க்க 10 பேர் வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு குழந்தைகள் சேட்டைகள் செய்கின்றனர். இன்றைய தலைமுறை பெற்றோர்களில் சிலர் தேவைக்கு அதிகமாக பிள்ளைகளுக்கு பாசம் காட்டி வளர்த்து வருகிறார்கள். இது சில நேரங்களில் ஆபத்தாகவும் மாறிவிடுகிறது.

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது அதீத பாசம் இருந்தாலும், நன்றாக வளர வேண்டும், நல்லறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிறு சிறு தவறுகள் செய்தால் திட்டுவதும், சில சமயங்களில் அடிப்பதும் உண்டு. அதிலும் 90-ஸ் காலத்தில் பிள்ளைகளை பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்ற அடம்பிடிப்பார்கள். பெற்றோர்கள் தான் திட்டியும், அடித்தும் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்பொதுள்ள சூழலோ தலைகீழாக மாறிவிட்டது.
சரி அதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம்... காவல் நிலையத்தில் பரபரப்பாக போலீசார் பணியாற்றிக் கொண்டு இருந்த போது 5-வயது சிறுவன் தனது தந்தை மீது புகார் அளிக்க வந்து இருக்கிறான். அப்படி என்னதான் அவனது அப்பா தவறு செய்தார் என்று கேட்ட போலீசார், சிறுவன் தனக்கே உரிய குறும்புத்தனத்துடன் அளித்த பதில் காவல் நிலையத்தையே கலகலப்பாக்கிவிட்டது.

இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதன் விவரம் வருமாறு:- மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தை திட்டுவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளான். மேலும் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் அடைக்குமாறு கூறியிருக்கிறான். மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக்கனேர் என்ற போலீஸ் நிலையத்தில் தான் சிறுவன் இந்த புகாரை கூறியுள்ளான்.
இதைக் கேட்ட போலீசாருக்கு சிரிப்பு கொட்டியது. இருந்தாலும், இது பற்றி சிறுவனிடம் பொறுமையாக கேட்டனர். உன் அப்பா என்ன தவறு செய்தார்? எதற்காக உன்னை அடித்தார்? என்று கேட்டனர். அதற்கு சிறுவன் கூறுகையில், "வீட்டருகே உள்ள சாலைக்கு போகக் கூடாது என்றும். ஆறுகள், கால்வாய்கள் போன்ற நீர்நிலை அருகே போகக் கூடாது என்று சொல்லி திட்டியதாகவும், உடனே அவரை பிடித்து ஜெயிலில் போடுங்க" என்று கடும் கோபத்துடன் சிறுவன் கூறியிருக்கிறான்.

இதையடுத்து போலீசார் சரிப்பா, நான் உங்க அப்பா மீது நடவடிக்கை எடுக்கிறேன். நீங்க வீட்டுக்கு செல்லுங்கள் என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த 5 வயது சிறுவனின் தந்தை அக்பால் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது வீட்டுக்கு சென்ற போது அக்பால் அங்கு இல்லை. எனினும் விசாரணையின் போது, மகனை ஆற்றுப்பக்கம் போகவேண்டாம் என்றும், சாலை அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை கூறியதாக கூறினார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications