இந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய-அமெரிக்க இடையேயான நட்புறவு மேலும் வலிமை பெறும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாஜ அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;
''அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த பிடனுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். உலக அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துக்கள் கொண்டவை. இந்தியா அமெரிக்கா இடையேயான நட்பை புதிய அதிபர் ஜோ பிடன் இன்னும் உயரத்துக்கு எடுத்துச்செல்வார் என நம்புகிறேன்.''
இவ்வாறு மோடி தனது வாழ்த்துச் செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
''அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்துக்கு வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் ஜோ பிடனுக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications