தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.. ராஜபாளையம் நாய்கள்.. மன் கீ பாத்தில் தமிழகத்தை புகழ்ந்த பிரதமர் மோடி
டெல்லி: தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகளை பிரதமர் மோடி தனது மன் கீ பாத் உரையில் புகழ்ந்து உள்ளார். அதேபோல் ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் மோடியை இன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஆத்ம நிர்பார் திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று தனது உரையில் பேசினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பெரும்பாலும் மன் கி பாத் உரையில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பேசுவது வழக்கம். இன்றும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

மோடி உரையில்
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது உரையில், 5 மாதங்களாக நாம் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறோம். நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுப் பொருட்களை நாம் சொந்த நாட்டில் வாங்க வேண்டும்.

பொம்மைகள் எப்படி
இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்.சில பகுதிகளில் விளையாட்டு பொம்மைகள் அதிகம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தஞ்சாவூர் பொம்மைகள் பிரபலமானவை. ஆந்திர பிரதேசத்தில் கொண்டபள்ளி, கர்நாடகாவில் ராமநகராவிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது.

உத்தர பிரதேச நிகழ்வு
உத்தர பிரதேசத்தில் வாரணாசி, அசாமிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது. இங்கு செய்யப்படும் விளையாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும். சொந்த தயாரிப்பில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது.நமது நாட்டில் திறமையான கைவினைகலைஞர்கள் உள்ளனர். ஒன்று சேர்ந்து விளையாடும் போது குழந்தைகள் இடையே ஒற்றுமை வளர்கிறது.

பொம்மைகள் மட்டுமல்ல
பொம்மைகள் மட்டுமல்ல செல்போன் செயலிகளையும் நாம் உருவாக்க வேண்டும். நவீன செயலிகளை உருவாக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். செயலிகளை உருவாக்க 'ஆப் இன்னோவேஷன் சேலஞ்ச்' போட்டி நடக்கிறது. இந்தியாவில் செயலிகளை உருவாக்க வேண்டும். ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் செயலிகளை உருவாக்க வேண்டும், என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் .

நாய்கள் எப்படி
அதேபோல் ராஜபாளையம் நாய்கள், சிப்பி நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும், இந்திய இனத்தை சேர்த்த நாய்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்திய இனத்தை சேர்ந்த நாய்கள் திறமையானது. நாட்டு நாய்கள் வலிமையானது, பாசமானது, என்றும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications