‛‛ராகுல் காந்தியை போல் இருக்கவே கூடாது’’.. என்டிஏ எம்பிக்களுக்கு மோடி ஸ்ட்ரிக்ட் உத்தரவு! பின்னணி
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி இன்று நன்றி தெரிவித்து உரையாற்ற உள்ளார். முன்னதாக இன்று காலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு அறிவுகளை வழங்கினார். அப்போது அவர் தேநீர் விற்றவர் நேருவை போல் 3வது முறையாக பிரதமரானதை எதிர்க்கட்சிகளால் தாங்க முடியவில்லை. ராகுல் காந்தி போல் ஒருபோதும் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ள கூடாது என பேசி சில ஸ்ட்ரிட்டாக ஆர்டர் போட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்கள் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 27 ம் தேதி லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் மத்தியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
இதையடுத்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.நேற்று லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியது பெரும் புயலை கிளப்பியது. அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். சிவபெருமான் படத்தை கையில் வைத்து பேசினார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, திமுக எம்பி ஆ ராசா உள்ளிட்டவர்களுக்கும் பாஜகவை கடுமையாக விமர்சித்தனர். ராகுல் காந்தி கூறிய பல கருத்துகள் பேசு பொருளான நிலையில் அதில் பல சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா, ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
இதையொட்டி பிரதமர் மோடி இன்று காலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றம் தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி அனைத்து கூட்டணி கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின்போது பிரதமர் மோடி எம்பிக்கள், மத்திய அமைச்சர்களுக்கு பல்வேறு அட்வைஸ்களை வழங்கினார்.
மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு யாரும் 3வது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் விரக்தியடைந்துள்ளனர். குறிப்பாக காந்தி குடும்பத்தை சேராத நான் நேருவை போல் 3வது முறையாக பிரதமராகி உள்ளதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் விரக்தியில் பேசி வருகின்றனர். ராகுல் காந்தி போல் லோக்சபாவில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது'' என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications