"ஹண்டர்" வந்துட்டாரு.. பழைய உளவு தலையை கொண்டு வந்த மோடி.. ஸ்பெஷல் டாஸ்க்.. இனிதான் கச்சேரி
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு முடிவுகளும் கவனிக்கப்படுகின்றன. அப்படி தற்போது பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு ஒன்றுதான் இந்தியாவின் மொத்த உளவுத்துறை, பாதுகாப்பு துறையின் நரம்புகளுக்கும் புதிய உத்வேகத்தை பாய்ச்சி உள்ளது.. அதோடு பாகிஸ்தான் நரம்புகளுக்கும் பயத்தையும் பாய்ச்சி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு.. தேசிய பாதுகாப்பு ஆலோசனை போர்ட் எனப்படும் National Security Advisory Board (NSAB) குழுவில் மொத்தமாக மாற்றங்களை செய்துள்ளது. இந்த குழுவின் புதிய தலைவராக அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் உளவு அமைப்பான ரா அமைப்பின் தலைவராக இருந்தவர். இவரின் தலைமையின் கீழ்தான் ரா அமைப்பு கடுமையான பலம் பெற்றது.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த இவர்.. 2005ல் இந்திய உள்நாட்டு உளவுத்துறையின் ஐபி பிரிவின் துணை இயக்குனர் ஆக நியமிக்கப்பட்டார். அதன்பின் 2010ல் ரா உள்ளே வந்தவர்.. ஓய்வு பெறும் வரை அங்கேயே பல அதிரடியை மேற்கொண்டார். இவரின் தொடர் அதிரடிகள் காரணமாக ஸ்பெஷல் அதிகாரியாக ராவிற்குள் வந்தவர் சில வருடங்களில் அதன் இயக்குனராக உயர்வு பெற்று ஓய்வு பெறும் வரை அங்கேயே இருந்தார்.

2015 வரை அங்கேயே இருந்தவர்.. அதன்பின் பல கவுரவ பொறுப்புகள், அரசுக்கு ஆலோசனைகள், பிரதமர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். இந்த அலோக் ஜோஷியைத்தான் மீண்டும் வரவழைத்து உள்ளார் மோடி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இவருக்கு அசாத்திய பவர் இருந்தது. அவரை எந்த விதமான ஈகோவும் பார்க்காமல் மீண்டும் மோடி அழைத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசனை போர்டின் புதிய தலைவர் இவர். அதோடு இந்த குழுவில் புதிதாக 7 உறுப்பினர்கள் இந்த முறை நியமிக்கப்பட்டு உள்ளனர். பல துறை வல்லுனர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டு உள்ளனர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள், 1 ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு துறை - உளவுத்துறை - வெளியுவுறவுத்துறை என்று 3 துறைகளின் பலத்தை ஒரே இடத்தில் கொண்டு வரும் விதமாக இந்த குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களில் முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் மற்றும் ரியர் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர். அதேபோல் குழுவில் இடம்பெற்றுள்ள ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் இந்திய காவல் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் ஆவர். ஏழு பேர் கொண்ட குழுவில் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி பி. வெங்கடேஷ் வர்மாவும் இடம்பெற்றுள்ளார்..
பாகிஸ்தானுடனான எல்லை பதட்டங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சீனாவில் அதிகம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. NSAB இன் இந்த மறுசீரமைப்பு அதில் முக்கியமான படியாகும். பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் ராஜதந்திரத் துறைகளில் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் NSA இன் பணிச்சுமையைக் குறைத்துள்ளது. அதாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பணிச்சுமை இதனால் குறையும். இதனால் உளவுத்தகவல்களை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை, திட்டங்களை இந்த குழு வகுக்கும். அதாவது ஒரு உளவு குழுவை அமைப்பது, அவர்களை எப்படி உளவு மேற்கொள்ள விடுவது, எப்படி தகவலை சேகரிப்பது, எப்படி அதை பயன்படுத்துவது, தாக்குதல்களை தடுப்பது, பதிலடியை வகுப்பது என்று பல விஷயங்கள் தொடர்பான கொள்கைகளை இவர்கள் வகுப்பார்கள். பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில் இந்த குழுவின் செயல்பாடு முக்கியம் ஆகும்.
இந்த குழு சைபர் பாதுகாப்பு, சைபர் போர், technical போர் முறைகள், ஏஐ போர் முறைகள் என்று பல விஷயங்களை ஆய்வு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications