ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்து.. பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி! தமிழில் போட்ட ட்வீட்!
டெல்லி: டெல்லியில் அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அனைவருக்கும் சங்கராந்தி, பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் என தமிழில் பதிவிட்டு இருக்கிறார் பிரதமர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில் அரசு சார்பில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கலை நிகழ்ச்சிகள் பறையாட்டம் என கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு காளைக்கு உணவு ஊட்டிய பிரதமர் நரேந்திர மோடி கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்து இருக்கிறார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," எனது அமைச்சரவை சகாவான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது. சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என கூறியுள்ளார்.

-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications