நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
டெல்லி: நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.
2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்.1ம் தேதி நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். முன்னதாக நாளை அதாவது ஜன.31ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான நாளை, இரு அவைகளின் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இந்த உரையின் மீது விவாதிக்க 3 நாட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த விவாதத்தின் மீது பிரதமர் மோடி பிப்.6ம் தேதி பதிலளித்து உரையாற்றுவார். இதனையடுத்து பிப்.13ம் தேதி கூட்ட தொடரின் முதல் கட்ட அமர்வு முடிவடைகிறது.
இந்நிலையில், கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட்டாக இது இருக்கும். இதில், வருமான வரி உச்சவரம்பு குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த மாற்றங்களும் கூட இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில், சமீப காலமான இன்போசிஸ் நாராயணன் போன்றோர் 12 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று பேசி வந்தனர்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த போதும், மத்திய அரசு முன்வந்து, "நாங்கள் இப்படி எந்த உத்தரவையும் போட மாட்டோம்" என்று கூறவில்லை. எனவே வேலை நேரம் குறித்து மாற்றம் வரும் என்றும் சொல்லப்படுகிறது.
மறுபுறம், வக்ஃபு சட்ட மசோதாவில் திருத்தங்கள் குறித்த பஞ்சாயத்தும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடுமையாக சண்டை செய்தன. எனவே, மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தாங்கள் கூறிய 44 திருத்தங்களையும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்து மசோதாவை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருத்திக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
எனவே, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விஷயமும் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications