அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை அளிக்கிறது... பிரதமர் மோடி இரங்கல்..!
டெல்லி: அமைச்சர் துரைக்கண்ணுவின் திடீர் மறைவு தனக்கு வேதனையை தருவதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.15 மணிக்கு காலமாகிவிட்டார்.
இதையடுத்து அவரது படத்துக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னையில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள துரைக்கண்ணுவின் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ''தமிழக அமைச்சர் துரைக்கண்ணு மரணம் வேதனை தருகிறது. சமுதாயத்திற்கு சேவையாற்றவும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும் குறிப்பிடத்தக்க வகையில் துரைக்கண்ணு முயற்சிகளை மேற்கொண்டார். இந்த துயரமான நேரத்தில் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்'' என மோடி தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications