ஜி20 இலச்சினையில் தாமரை ஏன் இடம் பெற்றது? பாஜகவின் சின்னம் என்பதாலா? பிரதமர் மோடியின் ஓஹோ விளக்கம்!
டெல்லி: ஜி 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் அதன் இலச்சினை, கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த இலச்சினையில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை இடம்பெற்றுள்ளது விவாதப் பொருளாகி உள்ளது.
ஜி 20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1-ந் தேதி முதல் இந்தியா ஏற்கிறது. ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை அமைப்பு. ஜி20 தலைமையின் போது, இந்தியாவின் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும்.
ஜி 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அதன் இலச்சினை, தீம் எனப்படும் கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர பெருவிழா ஆண்டில் ஜி-20 தலைவர் பதவி வகித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஜி-20 இலச்சினைக்காக ஆயிரக்கணக்கான ஆக்கபூர்வமான யோசனைகளை அரசு பெற்றது. ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

உலகம் ஒரே குடும்பம்
ஜி-20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை. இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு. வாசுதைவ குடும்பகம்-உலகமே ஒரே குடும்பம் என்பது நம் எண்ணங்களில் எங்றும் நிறைந்திருக்கும் ஒரு தீர்மானம். உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி-20 இலச்சினை மூலம் பிரதிபலிக்கிறது. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. அத்வைத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்த தத்துவம் இன்றைய மோதல்களைத் தீர்க்கும் ஊடகமாக இருக்கும்.
இந்த இலச்சினை மற்றும் கருப்பொருள், இந்தியாவில் இருந்து பல முக்கிய செய்திகளைக் குறிக்கிறது. "போரில் இருந்து விடுதலை பெற புத்தரின் போதனை, வன்முறையை எதிர்கொள்ள மகாத்மா காந்தியின் தீர்வுகள், ஜி-20 மூலம், இந்தியா அவர்களுக்கு ஒரு புதிய உயரத்தை அளிக்கிறது. இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவி நெருக்கடி மற்றும் குழப்பமான நேரத்தில் வருகிறது. ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் உலகளாவிய தொற்றுநோய், மோதல்கள் மற்றும் பல பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் பின்விளைவுகளை உலகம் கையாள்கிறது.

ஏன் தாமரை சின்னம்?
ஜி-20 இலச்சினையில் உள்ள தாமரை இது போன்ற கடினமான காலங்களில் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. உலகம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், அதை சிறந்த இடமாக மாற்ற நாம் முன்னேற முடியும். இந்தியாவின் அறிவு மற்றும் செழுமையின் இரு தெய்வங்களும் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறது. G-20 இலச்சினையில் தாமரையின் மீது பூமி வைக்கப்பட்டுள்ளது. தாமரையின் ஏழு இதழ்களின் முக்கியத்துவம் என்னவெனில் ஏழு கண்டங்களையும், ஏழு உலகளாவிய இசைக் குறிப்புகளையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏழு இசைக் குறிப்புகள் ஒன்றாக இணைந்தால், அவை சரியான இணக்கத்தை உருவாக்குகின்றன. பன்முகத்தன்மையை மதிக்கும் அதே வேளையில் உலகை நல்லிணக்கத்துடன் ஒன்றிணைப்பதை ஜி-20 நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உச்சி மாநாடு வெறும் ராஜதந்திர சந்திப்பு அல்ல. இந்தியா அதை ஒரு புதிய பொறுப்பாகவும், உலகின் நம்பிக்கையாகவும் எடுத்துக்கொள்கிறது.

தனித்துவமான இந்தியா
இந்தியாவிற்கு பன்முகத்தன்மை உள்ளதைப் போலவே தனித்துவமும் உள்ளது. ஜனநாயகம், பன்முகத்தன்மை, சுதேசி அணுகுமுறை, உள்ளடக்கிய சிந்தனை, உள்ளூர் வாழ்க்கை முறை மற்றும் உலகளாவிய சிந்தனைகள், இன்று உலகம் அதன் அனைத்து சவால்களுக்கும் இந்த யோசனைகளில் தீர்வு காண்கிறது. நாம் நிலையான வளர்ச்சியை அரசின் அமைப்பாக இல்லாமல் தனிமனித வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.சுற்றுச்சூழல் நமக்கு உலகளாவிய நோக்கமும், தனிப்பட்ட பொறுப்பும் ஆகும்.

பெண்களின் அதிகாரம்
இந்தியாவின் பெண்கள் அதிகாரம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் ஜன்தன் கணக்கின் மூலம் நிதி உள்ளடக்கம் போன்றவைகள் ஜி-20 தலைமை பதவியின் மூலம் உலகை அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜி7, ஜி77 அல்லது ஐநா பொதுக்குழு எதுவாக இருந்தாலும் கூட்டுத் தலைமையை உலகம் நம்பிக்கையுடன் நோக்குகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி ஒரு புதிய முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்தியா ஒருபுறம் வளர்ந்த நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறது. அதே சமயம் வளரும் நாடுகளின் கருத்துக்களை நன்கு புரிந்துகொண்டு வெளிப்படுத்துகிறது. ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற உலகளாவிய சுகாதார பிரச்சாரம் இயக்கமாக அமையப்பட்டுள்ளது. ஜி-20 கருப்பொருள்- ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம். ஜி-20 மாநாடு மத்திய அரசின் ஒரு நிகழ்வு அல்ல . மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்க வேண்டும். இந்த நிகழ்வானது இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'விருந்தினரே கடவுள்' என்ற நமது பாரம்பரியத்தின் ஒரு பார்வையை வெளிப்படுத்த ஜி-20 எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.

தமிழகத்தின் விருந்தோம்பல்
ராஜஸ்தான், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் விருந்தோம்பல் பண்புக்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன . இந்த விருந்தோம்பல் மற்றும் பன்முகத்தன்மைதான் உலகை வியக்க வைக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாநில அரசுகள், இந்த விஷயத்தில் முடிந்தவரை தங்கள் பங்கை அதிகரிக்க வேண்டும். நாட்டின் அனைத்து குடிமக்கள் மற்றும் அறிவு ஜீவிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்க முன்வர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications