என் அம்மா தடுப்பூசி போட்டாங்க; ரொம்ப ஹேப்பி... தடுப்பூசி போட மத்தவங்கள ஊக்குவிங்க...மோடி வேண்டுகோள்!
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எனது அம்மா இன்று போட்டுக் கொண்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
உங்களைச் சுற்றி தடுப்பூசி எடுக்க தகுதியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும். தடுப்பூசி போடுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஆட்டம் போட்டு வருகிறது தமிழ்நாட்டிலும் 500-க்குள் இருந்த பாதிப்புகள் தற்போது 600-க்கும் மேல் சென்று விட்டது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 86% உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணி தீவிரம்
கொரோனா பாதிப்புகளை விரட்டியடிக்க நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மோடியின் தாய் தடுப்பூசி போட்டார்
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதேபோல் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹுரா பென், இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ள மோடி, அனைவரும் தடுப்பூசி போடும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட ஊக்கப்படுத்துங்கள்
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எனது அம்மா இன்று போட்டுக் கொண்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் உங்களைச் சுற்றி தடுப்பூசி எடுக்க தகுதியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும். தடுப்பூசி போடுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications