அரசியலுக்கு வர வேண்டும் என நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது.. பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: அரசியலுக்கு வர வேண்டும் என்று என நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது என்று வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஒவ்வொரு மாத கடைசியிலும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் உரையாற்றுவார்.
அப்படி உரையாற்றும் போது நாட்டில் அந்த மாதத்தில் நடந்த சில சம்பவங்களை குறிப்பிட்டு பேசுவார். அதேபோல் நாட்டின் நடைபெற வேண்டிய விஷயங்கள் குறித்து மக்களிடம் கோரிக்கை வைப்பார்.
அப்படித்தான் இன்னும் மக்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்,. அப்படி பேசுகையில் தனது அரசியல் வருகை குறித்தும் மக்களிடம் பேசினார்.

சேவை செய்கிறேன்
தனக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்று எண்ணமே இருந்தது இல்லை பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் தற்போது தான் அரசியலில் ஒரு அங்கமாக இணைந்து நாட்டு மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை செய்து உள்ளதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

தண்டிக்கப்படவில்லை
தனது பள்ளி நாட்களில் என்.சி.சி மாணவராக இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் ஒருபோதும் பள்ளியல் தண்டிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

புஷ்கர திருவிழா
பிரம்மபுத்திரா புஷ்கர திருவிழா நவம்பர் 4 முதல் 16 வரை நடைபெற்றதாகவும் இத் திருவிழாவில் பங்கேற்க நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் வந்திருந்ததாகவும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மபுத்திரா புஷ்கர திருவிழா பற்றி நாட்டில் அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மிகுந்த ஆர்வம்
தொலைக்காட்சியைப் பார்க்கவும் புத்தகங்களைப் படிக்கவும் நேரம் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எப்போதும் வாசிப்பதில் விருப்பம் இருப்பதாகக் கூறினார்.

வாசிக்கும் பழக்கம்
திரைப்படங்களைப் பார்ப்பதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும் மிகக் குறைவான நேரமே டிவியைப் பார்ப்பதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறகையில் "நான் புத்தகங்களைப் படிக்கப் பழகினேன், ஆனால் இப்போது முன்புபோல என்னால் படிக்க முடியவில்லை. கூகுள் காரணமாக, வாசிப்பு பழக்கம் மோசமடைந்துள்ளது, ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பைத் தேட விரும்பினால், உடனடியாக ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடிப்பீர்கள். எல்லோரிடமும் இருப்பது போல, என்னுடைய சில பழக்கவழக்கங்களும் மாறிபோய்விட்டது என்றும் மோடி கூறினார்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications