2014க்கு முன்பு 1 ஜிபி நெட் டேட்டா ரூ.250, இப்போ ரூ.10.. எங்க ஆட்சியில் அசத்திட்டோம்ல.. மோடி பேச்சு
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் 1 ஜிபி டேட்டா ரூ 250, இப்போது ரூ 10- மோடி பேச்சு
டெல்லி: 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 1 ஜிபி நெட் டேட்டாவின் விலை ரூ 250 ஆக இருந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் ரூ 10 ஆக இருக்கிறது என பிரதமர் நரேந்திட மோடி நாடாளுமன்றத்தில் பேசினார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 1ஆம் தேதி 2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர்களில் அதானி விவகாரம் புயலை கிளப்பியது. அதானி குழுமம் குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதனால் நாள்தோறும் அவையில் கூச்சல் , குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு 13 மடங்கு அதிகரித்துவிட்டது என்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

எதிர்க்கட்சிகள் அமளி
அப்போது எதிர்க்கட்சிகள் அதானி அதானி என முழக்கமிட்டன. பதிலுக்கு ஆளும் கட்சியினர் மோடி மோடி என முழக்கமிட்டனர். இதனால் அவையில் குழப்பம் நிலவியது. பின்னர் பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசுகையில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ 250 ஆக இருந்தது.

1 ஜிபி டேட்டா
ஆனால் தற்போது 1 ஜிபி டேட்டாவின் விலை ரூ 10 ஆக உள்ளது. சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு தலா 20 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்துகிறார்கள். தற்போது அவர்களுக்கு மாதம் ரூ 5000 மிச்சமாகிறது. ஒவ்வொரு நடுத்தர மக்களின் கனவு ஒரு வீடு வாங்குவதாக இருக்கும். அது போல் தனது குழந்தையை மருத்துவராகவோ என்ஜினியராகவோ ஆக்க வேண்டும் என்ற கனவு, லட்சியம் இருக்கும். அதை நாங்கள் தற்போது மெய்பித்து காட்டியுள்ளோம். எங்கள் ஆட்சி காலத்தில் அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளோம்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு
இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வேகமாக முன்னேற்றங்களை செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவை உலகமே உற்று நோக்குகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அடிப்படையான தொழில்நுட்பங்களை கூட பயன்படுத்த போராடிய காலம் எல்லாம் நம் நாட்டில் இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் எல்லாருக்கும் சாத்தியமே. இந்திய பொருளாதாரம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு கடும் பாதிப்பை சந்தித்திருந்தது.

10 ஆண்டுகள் ஊழல் நிறைந்த காலம்
இந்த பத்தாண்டுகளை இந்தியா இழந்துவிட்டது என சொல்லலாம். அது போல் பணவீக்கமும் நீண்ட காலத்திற்கு இரட்டை இலக்கத்தில் இருந்தது. அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களும் நடந்தன. அந்த 10 ஆண்டு காலகட்டத்தில் மக்களுக்கு ஏதேனும் நன்மை நடந்தால், அதை விட தீமைகள் அதிகரித்திருந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாற்றில் 2004 - 2014 ஆம் ஆண்டு வரை முற்றிலும் ஊழல்கள் நிறைந்த காலமாக இருந்தது. நிறைய சட்டங்களை காங்கிரஸ் அரசு நிறைவேற்றினார்கள். ஆனால் அவற்றை முறையாக அமல்படுத்தவில்லை என பிரதமர் மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications