5 வருடங்களில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. மோடியின் பெருமைகளில் இது முக்கியமானது!
பிரதமர் மோடி தனது ஐந்து வருட ஆட்சியில் இதுவரை ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை.
டெல்லி: பிரதமர் மோடி தனது ஐந்து வருட ஆட்சியில் இதுவரை ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை. இந்தியாவில் முதல்முறை ஒரு பிரதமர் இப்படி ஆட்சி செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அரியணையில் ஏறினார். ராமர் கோவில் கட்டுவது தொடங்கி, கங்கை நதியை சுத்தம் செய்வது வரை. ஆனால் அவர் கொடுத்த பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
அதேசமயம் மக்கள் எதிர்பார்க்காத டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களை கொண்டு மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கினார்.

வாக்குறுதி கொடுத்தார்
அதேபோல் பிரதமர் மோடி கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை பலரும் மறந்து இருப்பார்கள். அதாவது, ஆட்சிக்கு வந்தால் நான் செய்தியாளர்களை சந்திப்பேன். வாரம் ஒருமுறையாவது செய்தியாளர்களை கண்டிப்பாக சந்திப்பேன். ஆட்சி திட்டங்களை நேரடியாக விளக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இல்லை
ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த இந்த 5 வருடங்களில் ஒருமுறை கூட செய்தியர்களை சந்திக்கவில்லை. நல்ல விஷயம் நடந்த போதும் சரி, புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட மிக மோசமான விஷயங்கள் நடந்த போதும் கூட, பிரதமர் மோடி செய்தியர்களை சந்திக்கவில்லை. எந்த மிக முக்கியமான விஷயங்களிலும் அவர் செய்தியர்களிடம் பேசவே இல்லை.

பிரச்சாரம் செய்தார்
பிரதமர் மோடி பிரச்சார மேடைகளில் மட்டுமே அதிகம் பேசினார். இந்தியாவில் பிரதமராக இருந்த போது அதிக முறை பிரச்சார மேடைகளில் பேசிய தலைவர்களில் மோடியும் ஒருவர். அதேபோல் யாரும் கேள்வி கேட்க முடியாத, ரேடியோ உள்ளிட்ட ஊடகங்களில் மட்டுமே மோடி அதிகமாக பேசினார்.

ஒரே பிரதமர்
அதேபோல் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காமல் ஆட்சியை முடித்த ஒரே பிரதமர் என்ற நற்பெயரையும் பிரதமர் மோடி பெற்று இருக்கிறார். இந்திய பிரதமர்கள் எல்லோரும் ஒருமுறையாவது செய்தியாளர்களை, சில நொடிகளாவது சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அப்படி இதுவரை பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications