உச்சமடையும் உக்ரைன் போர்.. ரஷ்ய அதிபர் புதின் உடன் பேசிய பிரதமர் மோடி! என்ன காரணம்
டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வழியாக உரையாடினார்.
உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் 6 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பு நாடுகளுக்கும் இடையே பெலராஸ் எல்லையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பெரியளவில் உடன்பாடு எட்டப்படவில்லை.
தற்போது முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்தும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ளவர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக அனைத்து இந்தியர்களும் இன்றிரவு 9.30 மணிக்குள் (உக்ரைன் நேரப்படி மாலை 6) கார்கிவ் நகரில் இருந்தும் உடனடியாக இந்தியர்கள் வெளியேறும்படி தூதரகம் கேட்டுக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் ரயில் நிலையங்களில் இந்தியர்கள் குவிந்துள்ளனர். இருப்பினும், நாட்டைவிட்டு வெளியேற இயக்கப்படும் ரயில்களில் உக்ரைன் மக்களை மட்டுமே காவலர்கள் அனுமதிப்பதாகவும் இந்தியர்களை அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியானது.
இது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருந்தது. உக்ரைனின் நிலைமை குறித்தும், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் இருவரும் ஆலோசனை செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த வாரம் தான் போர், தொடங்கிய சமயத்தில் ரஷ்ய அதிபர் புதின் தொலைப்பேசி வழியாகப் பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமை குறித்து விவரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications