டெல்லியில் அலுவலகத்தை மாற்றும் மோடி.. 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்கிற்கு இன்று குட்பை.. பின்னணி
டெல்லி: கடந்த 50 ஆண்டுகளாக பிரதமரின் அலுவலகமாக டெல்லியில் செயல்பட்டு வந்த சவுத் பிளாக்கை விட்டு பிரதமர் மோடி நாளை புதிய அலுவலகம் செல்கிறார். இந்த புதிய அலுவலகத்துக்கு சேவா தீர்த் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைத்து பணியை தொடங்க உள்ளார்.
சுதந்திரத்துக்கு பின்பு நம் நாடு அடைந்த வளர்ச்சிக்கு முக்கிய இடம் என்றால் டெல்லியின் ரெய்சினா ஹில் பகுதி தான். ஏனென்றால் இந்த ரெய்சினா ஹில் பகுதியில் தான் பிரதமர், மத்திய அமைச்சர்களின் அலுவலகம் அமைந்து இருந்தது.

சவுத் பிளாக் எனும் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு துறை அமைச்சகம், வெளியறவுத்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் செயல்பட்டது. நார்த் பிளாக் பகுதிில் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், நேரடி வரி, மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தது.
சவுத் பிளாக் - நார்த் பிளாக்
இதனால் தான் இந்த ரெய்சினா ஹில் பகுதியில் உள்ள சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் நம் நாட்டின் ஒவ்வொரு அசைவிலும் முக்கிய பங்காற்றி வந்தது. டெல்லியின் சவுத் பிளாக்கில் தான் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
புதிய அலுவலகம்
கடந்த 50 ஆண்டுகளாக இந்த சவுத் பிளாக் கட்டடத்தில் இருந்து தான் பல்வேறு பிரதமர்கள் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்தனர். இன்று அந்த கட்டத்தில் பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். அதன்பிறகு நாளை முதல் புதிய அலுவலகத்தில் பிரதமர் மோடி பணியாற்ற உள்ளார்.
‛சேவா தீர்த்’ என பெயர்
இதற்காக டெல்லியில் புதிதாக பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு ‛சேவா தீர்த்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‛சேவா தீர்த்' கட்டடம் நாளை மதியம் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த அலுவலகத்தை திறந்து வைத்து உள்ளே நுழைய உள்ளார்.
அதன்பிறகு அங்கிருந்து தான் பிரதமர் மோடி தனது அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளார் இந்த புதிய அலுவலகம் தற்போதைய சவுத் பிளாக் கட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் தான் அமைந்துள்ளது.
என்னென்ன அலுவலகம்?
இந்த புதிய கட்டத்தில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் மற்றும் முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் இந்தியா ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன. அமைச்சரவை செயலகம் ஏற்கனவே சேவா தீர்த்த்-2 க்கும், சர்தார் படேல் பவனில் செயல்பட்டு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் சேவா தீர்த்-3 க்கும் மாற்றப்பட்ட நிலையில் பிரதமர் மோடி நாளை அதிகார்ப்பூர்வமாக சேவா தீர்த் அலுவலகத்துக்குள் நுழைகிறார்.
பிரதமர் அலுவலக வரலாறு
டெல்லியில் சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் என அழைக்கப்படும் கட்டிடங்கள் 1931ம் ஆண்டு கட்டப்பட்டன. சுதந்திர இந்தியாவில், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழ் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் சவுத் பிளாக்கில் தான் நடைபெற்றது.
சவுத் பிளாக் கட்டடம் 1947ல் பிரதமர் செயலகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 1964ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானபோது புதிய கட்டம் கட்டப்பட்டது. இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அது இன்னும் விரிவுப்படுத்தப்பட்டது. பின்னர் 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இது 'பிரதமர் அலுவலகம்' என பெயரிடப்பட்டது.
வெறிச்சோடும் ராய்சினா ஹில்
அதன்பிறகு தொடர்ந்து 50 ஆண்டுகளாக சவுத் பிளாக்கில் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் இன்றுடன் விடைபெறுகிறது. பிரதமர் அலுவலகத்தை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் அடுத்த சில வாரங்களில் சவுத் பிளாக்கை விட்டு வெவ்வேறு அலுவலகங்களுக்கு மாற்றப்பட உள்ளது.
இதன்மூலம் நம் நாட்டின் வளர்ச்சி உள்பட பல்வேறு விஷயங்களின் மையப்புள்ளியாக இருந்த ராய்சினா ஹில்லின் சவுத் பிளாக் இனி வெறிச்சோடும். முன்னதாக, நார்த் பிளாக் கட்டிடமும் ஏற்கனவே காலி செய்யப்பட்டு அதன் அமைச்சகங்கள் ‛கர்த்தவ்யா பாதை' அருகே உள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications