ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு? பிரதமர் மோடி முக்கிய உத்தரவு
டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இறப்பாகப் புகார் வரும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் 2 லட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.6 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நாட்டில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், நாட்டில் தற்போது உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த நிலைமையைப் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் 12 மாநிலங்களில் அடுத்த 15 நாட்களுக்கு ஆக்சிஜன் எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதுள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ற வகையில் உற்பத்தியை அதிகரிக்கப் பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்கள் 24 மணி நேரமும் செயல்படப் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளார்.
இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும் மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications