சனிக்கிழமையில் வந்த நல்ல செய்தி..இன்று அக்கவுண்டுக்கே வரும் 2000 ஆயிரம்! எப்படி தெரிந்து கொள்வது?
டெல்லி : மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி நிதியை இன்று பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் நிகழ்சியில் 18வது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படும் நிலையில் இதன் மூலம் சுமார் ஒன்பதரை கோடி விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
பாஜக அரசு அமைந்த பிறகு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளும், மானியம், நிதி உதவி உள்ளிட்டவையும் ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

முன்னதாக தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 17ஆவது தவணை பிஎம் கிசான் நிதியை விடுவித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பதினெட்டாவது தவணை நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். சுமார் 20000 கோடி நிதி விடுவிக்கப்படும் நிலையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இன்று மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் தான் பதினெட்டாவது தவணையாக விவசாயிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 9.4 கோடி விவசாயிகள் பயனுடைய உள்ளனர். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் மூன்று புள்ளி நான்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையதளமும் இருக்கிறது. பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டதும் உங்கள் எண்ணுக்கு வங்கி தரப்பில் இருந்து குறுஞ்செய்தி வரும். இருந்த போதும் அந்தத் திட்டத்தின் கீழ் தான் உங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய என்ற மத்திய அரசின் https://pmkisan.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
அதன் ஹோம் பேஜில் 'கிசான் கார்னர்' என்ற பகுதியை கிளிக் செய்தால் பயனாளிகள் பட்டியல் இருக்கும். அதில் உங்கள் பெயர், திட்ட எண், தொலைபேசி, முகவரி, தாலுகா,மாவட்டம், மாநிலம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து 'அறிக்கையை பெறவும்' என கிளிக் செய்தால் நீங்கள் அந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளீர்களா என செய்தி கிடைக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications