டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

PM Cares: 1 லட்சம் "போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்" கொள்முதல் செய்யப்படும்.. பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து 1 லட்சம் நகரும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் கொள்முதல் செய்யவும் 500 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களையும் நிறுவவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாவட்ட தலைநகரங்களிலும் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இது உதவும் என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

PM Modi says Government to procure 1 lakh portable oxygen concentrators from PM cares fund

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும் பற்றாக்குறை உள்ள இடங்களில் ஆக்ஸிஜன் தேவையை பெரிதும் வழங்கும். இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மிக விரைவில் கொள்முதல் செய்யப்படும். எந்த மாநிலங்களில் அதிக கொரோனா கேஸ்கள் இருக்கின்றனவோ அந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும்.

சென்னையில் 5-ஆவது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!.. டிஸ்சார்ஜிலும் கலக்கல்! சென்னையில் 5-ஆவது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!.. டிஸ்சார்ஜிலும் கலக்கல்!

ஏற்கெனவே 713 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 500 புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் பிஎம் கேர்ஸ் நிதியை கொண்டு நிறுவப்படும். இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆர் மூலம் ஏற்படுத்தப்படும்.

English summary
Pm Narendra Modi says that Government to procure 1 lakh oxygen concentrators from PM cares fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X