ஜி7 மாநாடு.. பரபரக்கும் ஜப்பான்.. இன்றே மோடி பயணம்.. வரப்போகும் 15 நாடுகள்.. உற்று பார்க்கும் சீனா
டெல்லி: பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார். ஜப்பானில் 'ஜி-7' உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். உலகில் இருக்கும் சக்திவாய்ந்த குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். இந்த வருட உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நடக்கிறது.

இந்த ஜி7 குழுவில் உள்ள நாடுகள் இன்று உணவு நெருக்கடி, ஆற்றல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக ஆசியாவில் சீனாவின் மாபெரும் வளர்ச்சி குறித்தும், மார்க்கெட் உலகை சீனா கட்டுப்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவிரவாதம், ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் இன்று முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளன.
முன்பெல்லாம் இந்த ஜி7 மாநாடு என்பது உலகின் பொருளாதாரத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பொருளாதாரம் கொண்ட 7 நாடுகள் மட்டும் பங்கேற்கும் கூட்டமாக இருந்தது. அதன்பின் இந்த 7 நாடுகளின் பொருளாதாரம் வேகமாக சரிந்தது.
சீனா , ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்தது. இதனால் தற்போது குழுவில் இல்லாத வேறு பணக்கார நாடுகளை, வளரும் நாடுகளையும் ஜி7 நாடுகள் தங்கள் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர்.
முக்கியமாக ஜி 20 குழுவில் இருக்கும் நட்பு நாடுகளை ஜி 7 நாடுகள் தங்கள் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர். அந்த வகையில் ஜி7 நாடுகள் இல்லாமல் 8 புதிய நாடுகளுக்கு வேறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஜி7 மாநாட்டில் நடக்கும் பல்வேறு கூட்டணியில் ஒருமித்த கூட்டம் ஒன்றில் இவர்கள் ஒன்றாக கலந்து கொள்வார்கள். ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேஷியா, கொமோரோஸ் (ஆப்பிரிக்க யூனியனைப் பிரதிநிதித்துவம் செய்கிறது) மற்றும் குக் தீவுகள் (பசிபிக் தீவுகள் மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது) ஆகிய நாடுகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மோடி பயணம்: இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார். ஜப்பானில் 'ஜி-7' உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் அவர் கலந்து கொள்வதோடு ஜப்பான் பிரதமர் கிஷிடா உடன் தனிப்பட்ட சந்திப்பையும் நடத்த உள்ளார். இரண்டு நாட்டு சந்திப்பாக இந்த நிகழ்வு நடக்க உள்ளது.
ஜி 20 மாநாட்டை இந்த வருடம் இந்தியா வரும் செப்டம்பர் மாதம் நடத்த உள்ள நிலையில் ஜி7 மாநாட்டில் இந்தியாவின் வருகை அதிக கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக சீனாவிற்கு எதிராக இந்தியா உள்ள நிலையில் ஜி7 நாடுகள் இந்தியாவை மிக முக்கியமான தரப்பாக கருதுகிறது.
சீனா இந்த ஜி 7 குழுவை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஜி 7 போன்ற சில நாடுகள் மட்டும் கொண்ட சின்ன குழுவால் உலகையே கட்டுப்படுத்த முடியாது என்று சீனா பகிரங்கமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications