மைனாரிட்டி அரசு அமைந்து.. முதல்முறை இப்படி.. முக்கிய விஷயத்தில் பின்வாங்கும் மோடி.. என்ன நடக்குது?
டெல்லி: மத்தியில் மைனாரிட்டி அரசு அமைந்த நிலையில் இனி மத்திய என்டிஏ அரசு எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முடிவுகளை எடுக்க முடியாது. சில விஷயங்களில் பின்வாங்க வேண்டி இருக்கும். அப்படிதான் முக்கியமான விஷயம் ஒன்றில் மத்திய அரசு பின்வாங்க உள்ளதாம்.
முன்னதாக 5 மாநில தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு முன் விவசாய சட்டங்களை பாஜக கைவிட்டது. தற்போது பாஜக தனி மெஜாரிட்டி இல்லாமல் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்தின் உதவியோடு ஆட்சியில் அமர்ந்து உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுமே அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தன.

இரண்டு கட்சிகளுமே அக்னிபாத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.
அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
லோக்சபா தேர்தல்: மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வயது வரம்பு 17.5 - 21 வயது வரை இருக்கும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த திட்டம் பீகார், உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சிக்கே எதிராக திரும்பியது. இதை ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய விதம் பாஜகவிற்கு பெரிய சவுக்கடியாக் அமைந்தது. உத்தர பிரதேசத்தில் பாஜக வீழ்ச்சி அடையவும் இது முக்கிய காரணமாக மாறியது.
மாற்றம்: இந்த நிலையில்தான் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளமும் இந்த திட்டத்தை எதிர்த்து உள்ளன. மத்தியில் மைனாரிட்டி அரசு அமைந்த நிலையில் இனி மத்திய என்டிஏ அரசு எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முடிவுகளை எடுக்க முடியாது. சில விஷயங்களில் பின்வாங்க வேண்டி இருக்கும். அப்படிதான் அக்னி பாத் விஷயத்திலும் மத்திய அரசு பின்வாங்க உள்ளதாம்.
அதன்படி பாஜக தலைமையிலான NDA அரசாங்கம், குறைந்தபட்சம் 10 அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை இளம் வயதினருக்கு அதிக லாபம் மற்றும் வெகுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டத்தை மேலும் பயன் உள்ளதாக மாற்றுவது குறித்து செயலாளர்கள் குழு தங்களது பரிந்துரைகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய பின் பிரதமர் நரேந்திர மோடியிடம், செயலாளர்கள் குழு இறுதி விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 17 அல்லது 18 ஆம் தேதி பிரதமர் முன் விரிவான விளக்கத்தை அளிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications