டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீக்கிரம் வாங்க.. யு.எஸ் சென்ற அருண் ஜெட்லியை அவசரமாக அழைத்த மோடி.. இதுதான் காரணம்!

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மத்திய பாஜக அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அருண் ஜெட்லி அவசரமாக நாடு திரும்புவதன் காரணம் இதுதான்- வீடியோ

    டெல்லி: அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மத்திய பாஜக அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

    லோக்சபா தேர்தலுக்காக பாஜக ஒரு பக்கம் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி மாநிலம் மாநிலமாக சென்று மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் பாஜக தேர்தலுக்கு பின் எப்படி செயல்பட வேண்டும், எப்படி கூட்டணிகளை அமைக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒருகட்டமாக தற்போது அருண் ஜெட்லி அவசரமாக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு உள்ளார்.

    ரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்ரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்

    என்ன செய்கிறார்

    என்ன செய்கிறார்

    தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் இந்த நேரத்தில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு நடக்கும் உலக வங்கியின் சர்வதேச நிதி அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். அதேபோல் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அதற்கு சிகிச்சையையும் அமெரிக்காவில் பெற்று வருகிறார்.

    அருண் ஜெட்லி முக்கியம்

    அருண் ஜெட்லி முக்கியம்

    இந்த நிலையில் அருண் ஜெட்லி அவசரஅவசரமாக இந்தியா திரும்ப உள்ளார். பிரதமர் மோடி உடனடியாக இந்தியா திரும்பும்படி அவரை அழைத்துள்ளார். இன்று இரவோ இல்லை நாளை காலையோ அருண் ஜெட்லி இந்தியாவிற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. உலக வங்கியின் சர்வதேச நிதி அமைப்பின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறுகிறார்கள்.

    ஏன் அருண் ஜெட்லி

    ஏன் அருண் ஜெட்லி

    பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மிகவும் நெருக்கமான அமைப்புகள். பாஜகவினர் பலர் முன்னாள் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் பாஜகவின் பெரிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இணைப்பு பாலம் போல அருண் ஜெட்லி செயல்பட்டு வருகிறார். இரண்டு அமைப்பின் தலைவர்களுக்கு இடையில் இவர்தான் எப்போது ஆலோசனை பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

    ஆர்எஸ்எஸ் ஆலோசனை

    ஆர்எஸ்எஸ் ஆலோசனை

    தற்போது ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆலோசனை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. இந்த கூட்டம் நாளை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளவே அருண் ஜெட்லி அழைக்கப்படுகிறார் என்று செய்திகள் வருகிறது. லோக்சபா தேர்தல் தொடர்பாக இதில் மிக மிக முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகிறது.

    கூட்டணி எப்படி

    கூட்டணி எப்படி

    தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து விவாதிக்க ஆர்எஸ்எஸ் தலைமையில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது. இதில் அருண் ஜெட்லி கலந்து கொள்வது முக்கியமானது என்பதற்காக அவர் தற்போது அழைக்கப்பட்டு இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின்பே பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    As the new twist, PM Modi urgently calls Arun Jaitley to back from the USA - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X