"பக்கத்து நாட்டை எல்லாம் பாருங்க.. நமது நாடும் நாசமாகிடும்" எச்சரித்த பிரதமர்! என்ன விஷயம் தெரியுமா
மாநில அரசுகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் இப்போது பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிப்.1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்தது. இருப்பினும், முதல் சில நாட்கள் எதிர்க்கட்சிகள் அமளியால் அவை முற்றிலும் முடங்கியது.

நாடாளுமன்றம்
அதானி விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை தான் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மீது பேசினர். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் இரு அவைகளிலும் இதற்குப் பதிலளித்தார்.

பிரதமர் மோடி
இதற்கிடையே நேற்று ராஜ்யசாபாவில் பேசிய பிரதமர் மோடி பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர முயலும் மாநிலங்களை எச்சரித்தார். அண்டை நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பும் மாநிலங்களுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டங்களைக் கொண்டு வந்தால் நம் குழந்தைகளின் எதிர்காலமே முற்றிலுமாக பாழாகிவிடும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.

எச்சரிக்கை
அவர் மேலும் கூறுகையில், "அண்டை நாடுகளின் அவல நிலையைப் பாருங்கள். கவனக்குறைவாகக் கடன் வாங்கியது அந்த நாடுகளைக் கடன் சுமைகளில் எப்படித் தள்ளியுள்ளது என்பதைப் பாருங்கள். இதை நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. அடுத்த தலைமுறையினர் தானே சுமையைச் சுமக்க வேண்டும் என்று நினைத்து சில மாநிலங்கள் செய்வது போல், அலட்சியமாகச் செலவு செய்தால், நம் நாடும் நாசமாகிவிடும்.. எனவே, நாம் இந்த விவகாரத்தில் விளையாடக் கூடாது.. கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசுகள்
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கிச் செல்வதாக நிதியமைச்சகம் கூறியிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரித்துள்ளார். மீண்டும் பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்புவது மாநிலங்களுக்குப் பேரழிவை என்று நிதியமைச்சகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது புதிய கோரிக்கை இல்லை.. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராகப் பல கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கிவிட்டன.

அண்டை நாடுகள்
இது தொடர்பாகப் பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "அண்டை நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி அனைவருக்கும் தெரியும்.. நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தை வைத்து அரசியல் கட்சிகள் விளையாடக் கூடாது என்றார். மாநிலங்கள் நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்து வரும் தலைமுறையைப் பாதிக்கும் பாவத்தைச் செய்யக் கூடாது. இப்படிச் செய்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்றாலும் கூட நம் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும்" என்றார்.

ஓய்வூதிய திட்டம்
சுதந்திரமடைந்த போது செயல்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, 20 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். இதனால் அரசுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் புதிய ஓய்வூதிய முறையைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். நீண்ட தாமதத்திற்குப் பிறகு, 2004இல் மத்தியில் பாஜக அரசு இருந்த போது, அதிகரித்து வரும் ஓய்வூதிய செலவைக் குறைக்க புதிய ஓய்வூதிய முறையைக் கொண்டு வந்தது. இதன் கீழ் அரசும் ஊழியர்களும் தங்களின் சம்பளத்தில் முறையே 10 மற்றும் 14 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்குப் பங்களிக்கின்றனர்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications