ஜி 20 மாநாடு: உலக தலைவர்களுடன் அடுத்தடுத்து மோடி சந்திப்பு, ஆலோசனை.. பரபரப்பாக நடந்து முடிந்த மாநாடு
டெல்லி: வல்லரசுகள் மற்றும் வளரும் நாடுகள் என உலகின் முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் தலைமையை இந்த ஆண்டு இந்தியா ஏற்று நடத்தியது. டெல்லியில் இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வல்லரசுகள் மற்றும் வளரும் நாடுகள் என உலகின் முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் தலைமையை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20-மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில், இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாட்டை நடத்துவது இந்தியாவின் பொறுப்பாகும்.

எனவே, இதற்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு தயாராகி வந்தது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் தேர்வு செய்யப்பட்டது. அரங்கம் மட்டுமின்றி தலைநகர் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கடந்த சில நாட்களாகவே டெல்லியில் திரண்டனர்.
முதல் நாளான நேற்று தீர்மானங்களும் பிரகடனமும் வெளியிடப்பட்டது. இன்றும் ஜி 20 மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்தடுத்து பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி பேசினார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கேமரூன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, ஐரோப்பிய யூனியன்/ ஐரோப்பிய கவுன்சில், பிரேசில் மற்றும் நைஜீரியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பின்னர் நிறைவுரை ஆற்றிய பிரதமர் மோடி, "சிறந்த எதிர்காலத்தை நோக்கி உலகை கொண்டு செல்வதற்கு சர்வதேச அமைப்புகள் அனைத்தும் தற்போதைய நிதர்சனங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியம். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கு உதாரணமாக கூட சொல்லலாம். ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போது உலகம் இன்று இருப்பதை போல முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
அப்போது வெறும் 51 நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தது. ஆனால், தற்போது 200 நாடுகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஐக்கிய நாடுகள் அவை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தது போலத்தான் இப்போதும் உள்ளது. உலகம் மாறிவிட்டது. மாற்றத்திற்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications