டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் டோஸ் போட்டதும் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்துவிடாதீர்- பிரதமர் மோடி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதும் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்து விடாதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

    இந்தியாவில்... உலகின் பெரும் கொரோனா தடுப்பூசி இயக்கம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

    இந்தியாவில் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    PM Narendra Modi advises not to leave social distances after vaccine injected

    அவர் கூறுகையில் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே இன்று பாராட்டுகிறது. முதல் கொரோனா தடுப்பூசி டோஸ் பெற்றபின் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்து விடாதீர்கள். முகக் கவசங்களையும் அகற்றக் கூடாது. ஏனெனில் இரண்டாவது டோஸுக்குப் பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இரண்டு தடுப்பூசிகளுகமே பாதுகாப்பானவை. வதந்திகளை நம்ப வேண்டாம்.

    தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது. அடுத்த 2 அல்லது 4 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

    இந்தியாவில் தயாராரகும் தடுப்பூசிதான் உலகிலேயே விலை குறைந்தவை. இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல என்றார்.

    English summary
    PM Narendra Modi says that not to leave social distances after first dose of vaccine injected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X