மே.வங்க ரயில் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ 10 லட்சம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி கஞ்சன்எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அஸ்ஸாம் வழியாக மேற்கு வங்கம் செல்லும் இந்த ரயில் அம்மாநிலத்தின் நியூஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.

சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.
இந்த விபத்தில் தற்போது வரை 15 பேர் பலியாகி உள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளிலும் ஏராளமானோர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த இந்த ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்; படுகாயமடைந்தோர் சிகிச்சைக்கு தலா ரூ50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
PM @narendramodi has announced that an ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased in the railway mishap in West Bengal. The injured would be given Rs. 50,000. https://t.co/2zsG6XJsGx
— PMO India (@PMOIndia) June 17, 2024
இதனிடையே ரயில் விபத்து நிகழ்ந்த மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரிக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் விபத்துகள் நிகழ்ந்து வருவதால் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ரூ. 10 லட்சம் நிதி உதவி: இதனிடையே மேற்கு வங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும்;படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications