உ.பி. தேர்தல்: அடிக்கிற குளிரிலும் அசராமல் குவிந்த வாக்காளர்கள்.. பெருமையாக வாழ்த்து தெரிவித்த மோடி
லக்னோ: உத்தர பிரதேச மாநில முதற்கட்ட தேர்தலில் குளிரையும் பொருட்படுத்தாமல் ஓட்டளித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரசும் மாநிலத்தில் செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்து வருகிறது. இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவினாலும் கூட நேரிடையான மோதல் என்பது பாஜக, சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் இருக்கிறது.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி முதற்கட்ட தேர்தல் இன்று (பிப்.,10) ஷாமிலி, ஹாபூர், கவுதம் புத் நகர், முஸாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், புலன்ட்சார், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடக்கிறது. மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் சாகரன்பூரில் பிரதமர் நரேந்திர மோடிதேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் முதற்கட்ட தேர்தலில் ஓட்டளிக்கும் மக்கள் குறித்து பெருமையாக பேசினார். அவர் பேசுகையில், ‛‛மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையில் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகமாக ஓட்டளிக்க சென்றனர். அனைவருக்கும் பாராட்டுக்கள்'' என தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications