ஆசியாவிலேயே மிகப்பெரிய சாண எரிவாயு ஆலை - இந்தூரில் திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி, இந்தூரில் இருக்கும் ஆலையை இன்று திறந்து வைத்தார்.
குப்பைகள் இல்லா நகரங்களை உருவாக்க தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தொலைநோக்கு பார்வையுடன், கழிவை பணமாக்கும் மற்றும் சுழற்சி பொருளாதாரம் என்ற கொள்கைகளின் இந்த ஆலை வடிவமைக்கபட்டது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்ட சாண எரிவாயு ஆலையை, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார். இந்தூரில் 150 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரியதாக, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலையாக இந்தூர் ஆலை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த ஆலையில் 550 டன் இயற்கை கழிவுகளை தரம்பிரிக்கும் திறன் கொண்டதாகும். அதே போல், அந்தக் கழிவில் இருந்து 17 ஆயிரம் கிலோ இயற்கை எரிவாயுவையும், 100 டன் எடைக்கொண்ட இயற்கை உரங்களையும் இந்த ஆலை உற்பத்தி செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"இந்தியாவை தூய்மைப்படுத்த இதுபோன்ற சாண எரிவாயு ஆலைகள் அதிக அளவில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 75 பெரிய நகரங்களில் இதுபோன்ற எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும். நாட்டில் உள்ள நகரங்களை தூய்மையாகவும், மாசில்லாத பகுதிகளாகவும் மாற்றும் வரை இந்த இயக்கம் தொடரும்" என சாண எரிவாயு ஆலையைத் திறந்துவைத்து பேசினார் பிரதமர் மோடி.
இந்தூர் இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம். இங்கு இயற்கை முறையில் சாண எரிவாயு ஆலை ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலையாக இன்று திறக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தூய்மையான நகரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். இந்தூர் இதுவரை இந்த விருதை ஐந்து முறை பெற்றிருக்கிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications