செங்கோலை தொட்டு தொட்டு வணங்கிய பிரதமர்.. கண்ணாடி பெட்டியில் நிறுவும் போது இதை கவனிச்சீங்களா?
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோலை நிறுவிய போது பக்தி பரவசத்தால் பிரதமர் நரேந்திர மோடியின் கைகள் நடுங்கின. ஹர ஹர மகாதேவ கோஷமும் விண்ணை பிளந்தது.
டெல்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 96 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தில் தற்போது போதுமான இடவசதி இல்லை. இதனால் புதிய நாடாளுமன்றத்தை கட்டுமாறு மத்திய அரசுக்கு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டம் கட்ட கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் டாடா பிராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நாடாளுமன்றம் ரூ 862 கோடியில் கட்டப்படடது.
இந்த கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிகழ்ச்சிக்கு அழைக்காமல் பிரதமர் எப்படி நாடாளுமன்றக் கட்டடத்தை திறக்கலாம் என கேட்டு இந்த நிகழ்வில் பங்கேற்க புறக்கணிப்பதாக அறிவித்தன.
இந்த புதிய நாடாளுமன்றத் கட்டடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே மாதிரி செங்கோல் வைக்கப்படும் என அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரமடைந்ததை அடுத்து அப்போதைய பிரதமர் நேருவுக்கு ஆதீனங்கள் செங்கோலை அளித்ததாக சொல்லப்படுகிறது.
அதை பிரதிபலிக்கும் விதமாக மாதிரி செங்கோல் சென்னை உம்மிடி பங்காரு நகைக் கடையில் தயாரிக்கப்பட்டது. இன்றைய தினம் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா அறிவிக்கப்பட்டது. இதில் செங்கோலை ஒப்படைக்க ஆதீனங்கள் டெல்லி சென்றுள்ளனர். செங்கோலுக்கு சிறப்பு பூஜைகள செய்யப்பட்டன.
அப்போது செங்கோலை சாஷ்டாங்கமாக விழுந்து பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். பின்னர் சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக இருக்கும் செங்கோலை தமிழக ஆதீனங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர். அப்போது அதை தலைவணங்கி பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் மக்களவைக்குள் எடுத்துச் சென்றார்.
மக்களவை சபாநாயகர் இருப்பிடம் அருகே அமைந்துள்ள கண்ணாடி பெட்டியில் அந்த மாதிரி செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அப்போது தமிழக ஆதீனங்கள் வேத மந்திரங்களை முழங்கினர். ஹர ஹர மகாதேவ என்ற கோஷமும் எழுந்தது. பக்தி பரவசத்துடன கண்ணாடிபேழையில் செங்கோலை வைத்த போது பிரதமரின் கைகள் பக்தியால் நடுங்கின. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை பிரதமர் ஏற்றினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications