வந்தே பாரத்தை விடுங்க.. நாளை புதிய ரேபிட் எக்ஸ் ரயில்.. எந்த ரூட்டில் தெரியுமா? என்னென்ன வசதிகள்!
டெல்லி: குறுகிய தொலைவு கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அதிவேக ரயிலாக ரேபிட் எக்ஸ் ரயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை- நெல்லை, சென்னை- கோவை உள்ளிட்ட வழித்தடங்கள் உள்பட நாடு முழுவதும் 33 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சொகுசு மற்றும் அதிவேகம் என இந்த ரயில்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகளில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதன் சொகுசு இருக்கைகள் மற்றும் முழுவதும் குளிர்சாதன வசதி, அகன்ற ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவை பயணிகளை அதிகம் ஈர்த்துள்ளது. சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட அதிவேகத்தில் இயக்கப்படுவதால் பயணிகளின் பயண நேரமும் கணிசமாக மிச்சமாகிறது. இதனால், நீண்ட தூரம் செல்லும் படுக்கை வசதி கொண்ட மெட்ரோ ரயில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
180 கி.மீ வேகம்: இந்த நிலையில் தான் மணிக்கு 180 கி.மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அதிவேக வந்தே ரேபிட் எக்ஸ் ரயில் (RRTS - Regional Rapid Transit System) இயக்கப்பட உள்ளது. குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைக்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் ரயிலாக டெல்லி - மீரட் இடையே இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்.
1 மணி நேரத்தில்: தற்போதைய வழித்தடத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. இதனால், இந்த ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் இருந்து மீரட் செல்வதற்கான 82 கி.மீட்டர் தூரம் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் நிலையில், ரேபிட் ரயில் மூலம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இலக்கை அடைந்து விடலாம்.
என்னென்ன வசதிகள்: இந்த அதிவேக ரேபிட் எக்ஸ் ரயிலில் மொத்தம் ஏசி வசதி கொண்ட ஆறு பெட்டிகள் இருக்கும். அதில் ஒரு பர்ஸ்ட் கிளாஸ் வசதி கொண்ட பெட்டியும், பெண்களுக்கான ஒரு பெட்டியும் 4 சாதாரண பெட்டிகளும் இருக்கும். இரண்டு பக்கமும் இரண்டு இருக்கைகள் என ஒரு வரிசையில் 4 இருக்கைகள் இருக்கும் விசாலான இடவசதி இந்த பெட்டியில் இருக்கும். இதனால், பயணிகள் நெரிசல் இன்றி ஏறவும் இறங்கவும் முடியும்.
எமெர்ஜென்சி பட்டன் வசதி: ஒரு பெட்டியில் 72 பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். அனைத்து இருக்கையிலும் செல்போன் சார்ஜிங் செய்யும் வசதி, புத்தகங்கள் வைத்து படிக்கும் வகையிலான வசதி இருக்கும். நின்று கொண்டு பயணிப்பவர்களுக்கு ஏதுவாக கைப்பிடி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி முழுவதும் சிசிடிவி கேமிரா, வைஃபை வசதி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. தானியங்கி கதவுகள், தானியங்கி தீ தடுப்பு கருவிகள் , எமெர்ஜென்சி பட்டன் வசதி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications