நண்பருக்காக கலங்கிய பிரதமர் மோடி.. டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து வேதனை!
டெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபரும், நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் பிரச்சாரம் ஒன்றில் பேசியபோது மர்ம நபர் ஒருவர் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்பின் வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் தகவலின்படி, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். அதேசமயம், டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டால் பேரணியில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்தார், மேலும் இரண்டு பார்வையாளர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒரு படுகொலை முயற்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவத்திற்கு அமெரிக்காவில் இனி இடம் இல்லை. இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரே தேசமாக நாம் ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது நண்பரான டிரம்ப் மீதான தாக்குதலால் வேதனை அடைவதாக பிரதமர் மோடி வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"எனது நண்பரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications