ராணுவத்தை அவமதித்தவர்களை தண்டிக்க வாக்களிப்பீர் தாமரைக்கே.. டெல்லியில் மோடி பிரச்சாரம்
டெல்லி: நமது ராணுவத்தின் திறமையை சந்தேகித்த ஆம் ஆத்மிக்கா உங்கள் ஓட்டு என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

துவாரகா பகுதியில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று மாலை பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
வரவிருக்கும் டெல்லி தேர்தல்கள் இந்த தசாப்தத்தின் முதல் தேர்தல்கள். இந்த தசாப்தம் இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தியாவின் வளர்ச்சி இன்று எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்தது.
ஆம் ஆத்மி அரசால் டெல்லி மக்கள் ஆயுஷ்மான் பாரத் சலுகைகளை இழந்துவிட்டனர். டெல்லி விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியின் நன்மை கிடைக்கவில்லை. என்ன தவறு செய்தார்கள் அவர்கள். மானிய பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் மாற்றப்படவில்லை.
PM Narendra Modi at an election rally in Delhi: The upcoming Delhi elections are the first elections of this decade. This decade will belong to India. India's development will depend on the decisions taken today. pic.twitter.com/5lZcvOiwJu
— ANI (@ANI) February 4, 2020
டெல்லியின் தினசரி பயணிகள் செய்த தவறு என்ன? எதற்காக நான்காம் கட்ட மெட்ரோ பணிகள் அனுமதிக்கப்படவில்லை?
அவநம்பிக்கையின் இந்த அரசியலை பாஜக முடிவுக்குக் கொண்டுவரும். ஆம் ஆத்மி டெல்லியில் வெறுப்பு அரசியலைக் கடைப்பிடித்து வருகிறது. இது ஏழைகளுக்கு எதிரானது. இது டெல்லி மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
CAA போன்ற முக்கிய முடிவுகளில் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்கும் ஒரு அரசாங்கம் டெல்லிக்கு தேவை. நமது ராணுவத்தை அவமதிப்பவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். டெல்லி அரசு இந்த விவகாரத்தில் பொய்களை பரப்புகிறது எதிர்க்கட்சிகள் CAA சட்டத்திற்கு எதிராக மக்களைத் தூண்டுகின்றன.
CAAவை ஆதரிக்கிற, 370 வது பிரிவை ஒழித்தலை ஆதரிக்கிற, மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு பக்கபலமாக இருக்க கூடிய ஒரு அரசுதான் டெல்லிக்கு தேவை. இவ்வாறு மோடி உரையாற்றினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications