சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் முதல்முறையாக ஜம்முவில் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஏப்ரல் 24 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி ஜம்மு யூனியன் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் பாலி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஶ்ரீநகர் வருகை தருந்தார். ஶ்ரீநகர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள ரட்லே மற்றும் குவார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஜம்முவில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. டெல்லி அமிருதசரஸ்- கட்ரா இடையே ரூ 7500 கோடி ரூபாய் மதிப்பிலான 3 சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பனிகால்- காசிகுண்ட் இடையே ரூ 3,100 கோடி மதிப்பிலான 8.45 கி.மீ. நீள சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் பனிலால் மற்றும் காசிகுண்ட் இடையே பயணம் நேரம் 16 கி.மீ. தூரம் குறைக்கப்பட்டு ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும்.
பிரதமரின் ஜம்மு பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஜம்மு காஷ்மீருக்கு மாநில சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவு 2019 ஆம் ஆண்டு பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டவுடன் முதல்முறையாக இன்று ஜம்மு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி.
முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவில் வெடிகுண்டு வெடித்தது. அதேபோல் சஞ்வான் பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications