சுத்து சுத்துனு சுத்துதே! இஸ்ரேல் - ஈரான் மோதலால் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானத்துக்கு சிக்கல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் தான் இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் பறப்பதற்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் விமானம் வழக்கத்தை விட கூடுதல் நேரம் வானிலேயே சுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. இந்த அமைப்பின் உச்சி மாநாடு கனடாவில் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் இன்று முதல் 17 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து 5 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டுள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து ‛ஏர் இந்தியா ஒன்' சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு புறப்பட்டார்.
இன்று அவர் முதலில் சைப்ரஸ் நாட்டுக்கு செல்வார். அதன்பிறகு கனடா சென்று ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பிறகு குரேஷியா நாட்டுக்கு செல்வார். அங்கிருந்து நாளை கனடா சென்று ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். கனடாவில் நாளை, நாளை மறுநாள் நடக்கும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பார். அதன்பிறகு அங்கிருந்து குரேஷியா சென்று இருநாடுகள் இடையேயான உறவு, வர்த்தகம் பற்றி பேச உள்ளார்.
இதற்கிடையே தான் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் பிரதமர் மோடியின் பயணத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. அதாவது இன்று பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு செல்ல உள்ளார். இந்த நாடு மத்திய கிழக்கு நாடாகும். தற்போது அந்த பிராந்தியத்தில் தான் இஸ்ரேல் - ஈரான் நாடுகள் மோதி வருகின்றன. இந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான், ஈரான், ஈராக்,சிரியா, லெபனான், இஸ்ரேல் வான்வெளி பரப்புகளை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் தற்போது அந்த வான்வெளி பரப்பில் தான் ஈரானும், இஸ்ரேலும் ஏவுகணைகளை ஏவி மாறிமாறி தாக்கி வருகின்றன. இதனால் அந்த வான்வெளி பரப்பை பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' சிறப்பு விமானம் பயன்படுத்த முடியாது. மேலும் ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கிளன் வான்வெளி பரப்புகளை நிறுத்தி உள்ளன. அதேபோல் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாகிஸ்தான் வான்வெளி பரப்பை பயன்படுத்த நம் நாட்டின் விமானங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் மாற்று வான்வெளி பரப்பில் பறக்க வேண்டிய சூழல்ஏற்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஜோர்டான் வான்வெளி பரப்பை பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்த வான்வெளி பரப்பையும் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால் பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பின் பாதுகாப்பான வான்வெளி பரப்பை தேர்வு செய்து பிரதமர் மோடி ‛ஏர் இந்தியா ஒன்' விமானத்தில் சைப்ரஸ் நாட்டுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக சைப்ரஸ் நாட்டுக்கு நம் நாட்டில் இருந்து செல்ல வேண்டும் என்றால் 8 முதல் 9 மணிநேரம் எடுக்கும். ஆனால் தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கூடுதல் நேரம் பிரதமர் மோடி விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சைப்ரஸ் நாட்டில் இருந்து கனடாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். அங்கிருந்து செல்வதிலும் சிக்கல் உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் காரணமாக மாற்று வான்வெளி பரப்பில் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் பயணிக்க உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications