சிஆர்பிஎப் வீரர்களின் தியாகம் வீண் போகாது... பிரதமர் மோடி ட்வீட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதிகளின் மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தேன். சிஆர்பிஎப் வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

PM: Sacrifices of our brave security personnel shall not go in vain

உயிர் தியாகம் செய்த துணிச்சலான சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு முழு தேசமும் தோளோடு தோள் நிற்பார்கள் என்றும் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போல், சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது, கண்டிக்கத்தக்கது என்று டிவிட்டரில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த வீரர்களுக்கு நாடே வீரவணக்கம் செலுத்துகிறது. தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோழைத்தனமான செயலுக்காக தீவிரவாதிகளுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
30 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை ஸ்ரீநகர் செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+