Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் கணிப்பு.. அடித்து தூக்கும் பாஜக.. வரலாறு படைக்கப் போகிறதா தாமரை? காங்கிரசுக்கு பின்னடைவா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 3 மாநில தேர்தல் கணிப்புகளால் பாஜக உற்சாகமாக உள்ளது. ஆனால் 2023ல் நடந்துள்ள சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸுக்கு தோல்வியே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறிருப்பதால் இந்தஆண்டிலும் காங்கிரஸ் பின்னடைவையே சந்திக்கும் நிலை தொடர்பாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதனால் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரிய சவாலை காங்கிரஸ் தராமல் போகும் நிலையும் உருவாகலாம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். காங்கிரஸ் கட்சி சவாலான இந்த காலக்கட்டத்தில் அனைத்து எதிர் கட்சிகளையும் அரவணைத்து 2024 தேர்தலை சந்தித்தால் தான் பாஜகவிற்கு சவாலான ஒரு அணி உருவாகும் என்றும் அதற்கு சாத்தியமான நிலை உருவாகுவது ராகுல் காந்தி கையில் தான் இருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

அண்மையில் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலந்து ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் ஆட்சியை பிடிக்க போவது பாஜக என்று சொல்லப்பட்டதால் அந்த கட்சி உற்சாகமடைந்துள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டிலும் காங்கிரஸுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நரேந்திர மோடியை தலைமையாக கொண்டு பாஜக தேர்தலை எதிர்க்கொண்டது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

அதிக எண்ணிக்கை

அதிக எண்ணிக்கை

5 ஆண்டுகள் ஆட்சிக்கு பின்னர் 2019ம் ஆண்டு தேர்தலையும் பிரதமர் மோடி தலைமையிலேயே பாஜக எதிர்கொண்டது. அப்போதும் பாஜகவே வெற்றி பெற்றது. 2014ல் பெற்ற எம்பிக்கள் எண்ணிக்கையை விட 2019ல் மிக அதிக எண்ணிக்கையில் எம்பிக்களை பெற்று அசத்தியது பாஜக. கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் பாஜகவே ஆட்சிக்கு வந்துவிட்டது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக சட்டசபை தேர்தல்களில் வென்று ஆட்சி செய்து வருகிறது.

அரையிறுதி போட்டி

அரையிறுதி போட்டி

இந்நிலையில் 9 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் பல்வேறுபுகார்களை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஓராண்டில் அதானியுடன் இணைத்து பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அடுத்த ஆண்டு தேர்தலில் பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என எதிர்க்கட்சிகள் பலமாக நம்புகின்றன. இச்சூழலில், 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் 2023 இல் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் கட்சிகளே நாடாளுமன்ற தேர்தலில் வெல்லும் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட அடுத்து நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இது அரையிறுதி போட்டி போல கட்சிகளால் பார்க்கப்படுகிறது.

நாகலாந்து

நாகலாந்து

இந்த சூழ்நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் மூன்று வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கானத் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் முடிந்துள்ளது. மார்ச் 2 நாளை வெளியாக உள்ள இதன் முடிவுகள் மீதான கணிப்புகள் பாஜகவை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 27ம் தேதி மாலை தேர்தல் நடந்த உடன், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. இந்த கணிப்புகள் எல்லாமே பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைத்துவிடும் என்றும் மேகாலயாவில் மட்டும் பாஜகவிற்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கும் என்றும் கணிப்புகள் வந்துள்ளன.

காங்கிரஸ்

காங்கிரஸ்

2014 முதல் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக திரிபுராவில் கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சியில் இருந்து இடதுசாரி கட்சிகளை வீழ்த்தி பாஜக 2018 இல் தட்டிப் பறித்திருந்தது. இதனிடையே அண்மையில் இங்கு நடந்த தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் கணிப்புகளோ காங்கிரஸ் இடதுசாரிகளுக்கு பெரிய வெற்றி கிடைக்காது என்றே சொல்கின்றன. பாஜகவிற்கு கடந்த முறை 36 இடங்கள் கிடைத்தது. இந்த முறை அதைவிட அதிகமாக 45 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறியுள்ளன. இந்த கணிப்புகளின்படி நாளை முடிவுகள் வெளியானால்,பாஜகவிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும். எனினும் இவை சிறிய மாநிலங்கள் ஆகும். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டால் வடகிழக்கு மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை மிகக்குறைவு ஆகும்.

காங்கிரஸ்க்கு சவால்

காங்கிரஸ்க்கு சவால்

அதேநேரம் இந்த சிறிய மாநிலங்களில் கிடைக்கும் வெற்றி, பெரிய மாநிலங்களான கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவை உற்சாகமாக பணியாற்ற வைக்க உதவும். இந்த நன்கு மாநிலங்களிலும் சட்டப்பேரவைக்கும் தேர்தல் இந்த ஆண்டு தான் நடைபெற உள்ளன. இந்த நான்கு மாநிலங்களுமே பாஜக காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ள மாநிலாங்கள் ஆகும். இங்கு வெற்றி பெற்றால் தான் காங்கிரஸ் மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் ஒற்றுப்பட்டு பாஜக எதிர்ப்பார்கள் மாறாக தோற்றால் பாஜகவிற்கு மேலும் உற்சாகத்தையும் அசுர பலத்தையும் அளிக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இதனிடையே வடகிழக்கு மாநில தேர்தலில் போட்டியிட்ட மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மேகலயாவில் மட்டும் ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாக உருவெடுக்கும் கணிப்புகள் உள்ளன. இது மம்தாவை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தேர்தல் கணிப்புகள் உண்மையா என்பது நாளை மார்ச் 2ம் தேதி தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+