58 தொகுதிகளிலும் அசம்பாவிதம் இல்லை! அமைதியாக நடந்து முடிந்தது 6ம் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

Polling for the 6th phase of Lok Sabha elections for 58 constituencies has started

கடைசியாக பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிஷா 5, உ.பி. 14, மே. வங்கம் 7 என 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்களார்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடைமையாற்றினர். இந்த நிலையில் விறுவிறுப்புடன் நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநில வாரியாக பார்த்தால், பீகாரில் வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மகாராஜ்கஞ்ச் என 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கும்,

ஜார்கண்ட்டில் கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் என 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சர், தேன்கனல், கட்டாக், பூரி, புவனேஸ்வர் என 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி என 14 தொகுதிகளுக்கும்

மேற்கு வங்கத்தில் தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பாங்குரா, பிஷ்ணுபூர் என 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. 58 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இது தவிர, ஒடிசாவில் உள்ள 42 சட்டசபை தொகுதிகளுக்கும் ஆறாவது கட்டமாக தேர்தல் நடந்துள்ளது. மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடந்துமுடிந்துள்ளது.

பிடிபி தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, ஹிசாரில் முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மூன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ஆகியோர் இந்த தேர்தரலில் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

6ம் கட்ட தேர்தல் முடிவடைந்தது. இதனால், நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதாவது மொத்தமுள்ள லோக்சபா தொகுதிகளில் 90% தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று அர்த்தம்.

கடந்த 2019ம் ஆண்டு 6ம் கட்ட தெர்தலில் 64.9 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. மொத்தமாக 6 கட்டங்கள் வரை 67.7 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+