யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!
டெல்லி: யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த 3 நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். நான்காவது நாளாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார்.

இன்று தனியார் தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. பல்வேறு முக்கியமான துறைகளில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். சுரங்க மற்றும் நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும்.
விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் இனி தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்படும்.
சேவைகள் விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் இதன் மூலம் வழங்கப்படும். அதே சமயம் தனியார் வழங்கும் இந்த சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும். இதற்கான வரி விதிப்பு முறைகள் கொண்டு வரப்படும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications